Published : 08 Jun 2020 11:56 AM
Last Updated : 08 Jun 2020 11:56 AM
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்ைக தொடர்ந்து 2-வது நாளாக 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது, உயிரிழப்பு 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனாவால் 9 ஆயிரத்து983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்ைக 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது
கரோனாவில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 94 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணக்கை 7ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் 206 பேர்உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 91 பேர், குஜராத்தில் 30 பேர், தமிழகம், உத்தரப்பிரதேசத்தில் தலா 18பேர், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசத்தில் தலா 13 பேர், ராஜஸ்தானில் 9 பேர், ஹரியாணாவில் 4 பேர், ஆந்திரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்டில் தலா 2 பேர், ஒடிசா,பஞ்சாபில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,249 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 412 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உயிரிழப்பு 761ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 240 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 123 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 ஆகவும், ஆந்திராவில் 75 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 61 பேரும், பஞ்சாப்பில் 50 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 41 பேரும், ஹரியாணாவில் 28 பேரும், பிஹாரில் 30 பேரும், ஒடிசாவில் 9 பேரும், கேரளாவில் 15 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், ஜார்க்கண்டில் 7 பேரும், உத்தரகாண்டில் 13 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 39,314 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 667 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 27,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,664 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 20,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,635 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 10,599 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9,401 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 10,536 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 8,187 பேரும், ஆந்திராவில் 4,708 பேரும், பஞ்சாப்பில் 2,608 பேரும், தெலங்கானாவில் 3,580 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 4,087 பேர், கர்நாடகாவில் 5,452 பேர், ஹரியாணாவில் 3,952 பேர், பிஹாரில் 4,448 பேர், கேரளாவில் 1,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 803 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 2,856 பேர், சண்டிகரில் 314 பேர் , ஜார்க்கண்டில் 1,099 பேர், திரிபுராவில் 800 பேர், அசாமில் 2,565 பேர், உத்தரகாண்டில் 1,355 பேர், சத்தீஸ்கரில் 1,073 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 413 பேர், லடாக்கில் 103 பேர், நாகாலாந்தில் 118 பேர், மேகாலயாவில் 36 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 36 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 34 பேர், சிக்கிமில் 7 ேபர், மணிப்பூரில் 172 பேர், கோவாவில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 51 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT