Published : 08 Jun 2020 07:07 AM
Last Updated : 08 Jun 2020 07:07 AM

மத்திய பிரதேசத்தில் சிகிச்சைக்கு பணம் தர முடியாததால் முதியவரை கட்டிப் போட்ட மருத்துவமனை

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை கட்டிலில் கட்டிப் போடப்பட்டுள்ள முதியவர்.

போபால்

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததில் குணமடைந்துள்ளார். மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ள நிலையில் மேலும் ரூ.11 ஆயிரம் செலுத்தவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரதுகுடும்பத்தினரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, வீட்டுக்கு அனுப்ப மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அவரை கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதுகுறித்து முதியவரின் மகள் கூறும்போது, “எங்கள் தந்தை தனியார் மருத்துவமனையில் நான்கு நாட்களாக தங்கி சிகிச்சை எடுத்தார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்த முடியவில்லை. அதற்காக எங்கள் தந்தையை கட்டிலுடன் கட்டி் வைத்துள்ளனர்” என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, "முதியவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாதிருக்க கட்டிப்போட்டுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் அவரது சிகிச்சைக்கான அனைத்து கட்டணத்தையும் ரத்து செய்துள்ளோம்" என்றனர்.

இந்த தகவலை அறிந்த ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனை நிர்வாகம் மீதுநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x