Published : 07 Jun 2020 04:05 PM
Last Updated : 07 Jun 2020 04:05 PM
ெடல்லியில் மத்திய அரசு மருத்துவமனைகள் தவிர, மாநிலஅரசு மருத்துவமனைகள், சில தனியார் மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்
டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ெவளியிட்ட தகவலின்படி டெல்லியில் 761 பேர் உயிரிழந்துள்ளனர், 27 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த ஒருவாரமாக டெல்லிக்குள் மற்ற மாநிலத்தார் யாரும் வராத வகையில் மாநில எல்லைகளை டெல்லி அரசு சீல் வைத்திருந்தது. அவசியமான காரணங்களுக்காக வருவோர் அரசிடம் முறையான பாஸ் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஊடங்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி அரசு அமைத்த 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதிக்குள் 15ஆயிரம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தேவை என்று தெரிவித்துள்ளனர். அதன்படி டெல்லியில் உள்ளஅரசு மருத்துவமனைகள், மற்றும் சில தனியார் மருத்துவமனைகள் மட்டும் டெல்லி மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படுகிறது. மத்தியஅரசு மருத்துவமனைகளில் எந்த மாநில மக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் மூலம் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 10 ஆயிரம் படுக்கைகளை உறுதி செய்ய முடியும். டெல்லியின் எல்லைகள் கடந்த ஒருவாரமாக சீல் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நாளை முதல்திறக்கப்படுகின்றன.
அதன்பின் எந்தமாநில மக்களும் டெல்லியில் உள்ள மத்தியஅரசு , தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். இப்போது இருக்கும் சூழலில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் மற்ற மாநிலத்தவர்களை சிகிச்சைக்காகஅனுமதித்தால், 3 நாட்களில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பிவிடும். ஆனால் மருத்துவ குழுவின் பரிந்துரையின்படி டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது
மற்ற வகையில் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சைக்காக வேறு மாநில மக்கள் டெல்லிக்கு வரலாம் அவர்கள் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைப் பெறத் தடையில்லை
இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் தெரிவி்த்தார்
சமீபத்தில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்று அதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த செயலியில் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பியுள்ளதாக தகவல்தெரிவிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் முதல் கேஜ்ரிவால் தனியார் மருத்துவமனைகளைக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
மக்களின் புகாரையடுத்து, டெல்லி அரசு மருத்துவமனைகள் அனைத்தும் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படுவதாக கேஜ்ரிவால் அறிவித்தார்.
முதல்வர் கேஜ்ரிவால் கருத்துக்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுைகயில் “ டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கு என்று எவ்வாறு ஒதுக்க முடியும். மும்பை மக்களுக்கு மட்டும்தான் மும்பை மருத்துவமனைகளா, டெல்லிக்கு வருவதற்கு தனியாக பாஸ்போர்ட், விசா ஏதும் தேவையில்லை. நாடுமுழுவதும் உள்ள மக்கள் டெல்லிக்கு வந்து சிகி்ச்சை பெறலாம். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.இந்த நேரத்தில் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT