Published : 07 Jun 2020 02:53 PM
Last Updated : 07 Jun 2020 02:53 PM
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில்தான் முடிவுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் இரு மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட புதிய கணித ரீதியிலான ஆய்வில் கணித்துள்ளனர்
இவர்களின் ஆய்வின் படி குணமடைந்து செல்வோர், உயிரிழப்புக்கு இணையாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வரும்போது அதன் மதிப்பு மாறாத 100 சதவீதத்தை அடையும் போது கரோனா இந்தியாவிலிருந்து அகலும் எனத்தெரி்வித்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுசுகாதாரத் துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் மருத்துவர் அனில் குமார், இணை இயக்குநர் மருத்துவர் ரூபாலி ராய் ஆகியோர் இருவரும் எபிடீமியாலஜி இன்டர்நேஷனல் எனும் ஆன்-லைன் இதழில் தங்களின் ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர்
இவர்கள் இருவரும் கரோனா வைரஸ் போக்கு, பரவல் குறித்து ஆய்வு நடத்த “ பெய்லி கணித மாதிரியை” பயன்படுத்தி கணித்துள்ளனர். இந்த கணிப்பு முறையில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, முழுவதும் குணமடைந்து சென்றவர்கள் மற்றும் உயிரிவந்தவர்கள் ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டுள்ளனர்.
இந்த இரு மருத்துவர்களும், தொடர் தொற்று வகையை ('continuous infection' type) பயன்படுத்தியுள்ளனர். தொடர் தொற்று வகை என்பது கரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் குணமடைந்து சென்றவராக அல்லது இறந்தராக இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் அவர் சமூகத்தில் தொற்றுக்கான காரணியாகவே கருதப்படுவார்கள்.
இதில், பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் அகற்றப்பட்ட நபர்களின் சதவீதம்(குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள்) கணக்கிட்ட பிறகு அகற்றுதல் விகிதம் கணக்கிடப்படுகிறது. மொத்த தொற்று வீதத்திற்கும் மொத்த மீட்பு வீதத்திற்கும் இடையிலான உறவு குறித்த முடிவுகளைப் பெற, ரிக்ரஷன் அனாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது
இதன்படி பெய்லி ரிலேட்டிவ் ரிமூவல் ரேட்(பிஎம்ஆர்ஆர்ஆர்) முறை மூலம் இந்தியாவில் கரோனா வைரஸ் குறித்த ரிக்ரஷன் அனாலிஸிஸ் செய்யப்பட்ட போது அந்தநேர்கோடு செப்டம்பர் நடுப்பகுதியில்தான் 100 சதவீதத்தை அடையும் அப்போதுதான் இந்தியாவில் கரோனா பாதிப்பு முழுமையாகக்குறையும்.
மக்கள் மற்றும் சுற்றுச்சுழல் ஆகியவற்றோடு தொடர்புடைய மாறக்கூடிய காரணிகளை அரசுகள் கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டுவரவும் மாற்றவும் முயற்சிக் வேண்டும். இதனால் பிஎம்ஆர்ஆர்ஆர் நேர்கோடு தொடர்்ந்து மேல்நோக்கி செல்லும்
அதாவது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிளில் மேலும் கரோன வைரஸ் பரவாமல் இருக்கின்ற அளவை கட்டுப்படுத்தியும், தொற்றுப்பரவலைக் குறைக்கவும் மத்திய ,மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் மேலாண்மை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆய்வுகள் என்பது குறிப்பிட்ட காலத்தில், கரோனா தொற்றுவிகிதம், குணமடைந்து சென்றோர் வீதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டது. இயற்கை சீற்றங்கள், மக்கள் கூட்டமாக நகர்தல், நாட்டில் நடக்கும்முக்கிய நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள் ஆகியவை இந்த மாதிரியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT