Last Updated : 07 Jun, 2020 12:47 PM

 

Published : 07 Jun 2020 12:47 PM
Last Updated : 07 Jun 2020 12:47 PM

கிழக்கு லடாக் எல்லைப்பிரச்சினை: அமைதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா, சீன ராணுவம் ஒப்புதல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக் எல்லைப்பிரச்சினையை இந்திய ராணுவமும், சீன ராணுவமும்அமைதிப்பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள இரு தரப்பினரும் சம்மதித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

எல்லைப்பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதையும், ராணுவம் மற்றும் நிர்வாக ரீதியாகவும் தீர்வு காணும் முயற்சிகள் தொடரும் என அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா –சீன எல்லைப்பகுதியில் உள்ள 3,500கி.மீ பகுதி இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனால் லடாக், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், இமாச்சல்பிரதேசம், திெபத் ஆகிய எல்லைப்பகுதிகளில் சீன அவ்வப்போது படைகளைக் குவித்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

குறிப்பாக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்து தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்கு குழிகள்அமைப்பதிலும் இருந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்பு பிரச்சினையைத் தீ்ர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்புராணுவத்தினரும் 12 முறை பேச்சு நடத்தினர், ராணுவ மேஜர் அளவிலான பேச்சு 3 முறை நடந்தது. இந்த பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, இந்தியா,சீனாஅதிகாரிகள் மட்டத்தில் வெள்ளிக்கிழமையும், நேற்றும் நடந்தது

இதில் இந்தியா தரப்பில் வெளியுறவுதுறை இணைச்செயலாளர் ஸ்ரீவஸ்தவாவவும், சீன வெளியுறவுத்துறை சார்பில் வூ ஜியாங்கோவும் பங்கேற்றனர்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு சமூகமாக முடிந்தது. இருதரப்பு நாடுகளின் நட்புறவுக்கு எல்லைகளில் அமைதியும் நிலைத்தன்மையும் அவசியம் என்பதை வலியுறுத்தி சீன, இந்தியா தலைவர்கள்இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், அதை மனதில் வைத்து எல்லைப் பிரச்சினையைஇரு நாட்டு ராணுவமும்,நிர்வாகம் அமைதிாயன முறையில் தீர்்க்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சூசுல் பகுதியில் உள்ள மால்டோ எனும் இடத்தில் இரு நாட்டுராணுவ அதிகாரிகள் தலைமையில் பேச்சு நடந்தது. இரு நாடுகளுக்குஇடையே நட்புறவு ஏற்பட்டு 70-வது ஆண்டு இந்த ஆண்டு கடைபிடிப்பதால், இரு தரப்பும் பிரச்சினைகளுக்குவிரைவாகத் தீர்வு கண்டு, நட்புறவை மேம்படுத்த வேண்டும் என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது

எல்லைப்பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் உறுதி செய்ய இரு தரப்பு நாடுகளும் ராணுவம், தூதரக ரீதியில் நடக்கும் பேச்சு தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x