Last Updated : 07 Jun, 2020 10:37 AM

 

Published : 07 Jun 2020 10:37 AM
Last Updated : 07 Jun 2020 10:37 AM

கேரளாவில் யானை இங்கு மாடு: தீவணத்தில் வெடி வைத்து கர்ப்பிணி பசு மாடு காயம்: இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் கைது

பிரதிநிதித்துவப்படம்

சிம்லா,


கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து ைவத்து கொன்ற இரக்கமற்ற சம்பவம் மறைவதற்குள் இமாச்சலப்பிரதேசத்தில் கர்ப்பிணி பசுமாட்டிற்கு தீவணத்தில் வெடிமருந்து வைத்து வாய்,தாடையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பசுமாட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவகர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
பிலாஸ்பூர் மாவட்டம், தாஹத் கிராமத்தைச் சேர்ந்தவர் குர்தியால் சிங். இவர் வளர்த்து வரும் பசுமாடு கர்ப்பிணியாக இருந்தது.குர்தியால் சிங்கின் வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் நந்த் லால் திமான். குர்தியால் சிங் தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடும் போது பல முறை நந்த் லால் திமான் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் இருவருக்கும் விரோதம் இருந்து வந்துள்ளது

இந்த சூழலில் கடந்த மாதம் 25-ம் ேததி இரவு மாடு கட்டியிருந்த பகுதியிலிருந்து திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது கேட்டு குர்தியால் சென்று பார்த்தபோது பசுமாட்டின் வாய்,தாடை பகுதிகள் ரத்தக்காயம் அடைந்திருந்தன.

இதையடுத்து, பசுமாட்டுக்கு தீவணத்தில் வெடிவைத்ததாக திமான் மீது குர்தியால் சிங் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, ஐசிபி பிரிவு 429 பிரிவின் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் போலீஸார், கால்நடை மருத்துவக்குழுவினருடன் தாஹத் கிராமத்துக்குச் சென்று குர்தியால் சி்ங் பசுமாட்டுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். அந்த மாட்டின் ரத்தம், வாய்ப்பகுதி காயம், பற்கள்,தாடையில் ஏற்பட்ட சேதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வி்ல் பசுமாட்டுக்கு வெடிமருந்து வைத்துதான் தாடை, பற்கள் சேதமடைந்தது என்று மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர். இதையடுத்து, குர்தியால் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் நந்த் லாலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நந்த் லாலை விசாரித்த போது, குர்தியால் சிங்கின் பசுமாடு தனது வயலிலும், தோட்டத்திலும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் வெடிமருந்து வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பசுமாட்டு்ககு தேவையான மருத்துவ சிகி்ச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்து வெடித்து பசுமாடு காயமடைந்த மறுநாள் அந்த பசுமாடு கன்றை ஈன்றது.
இவ்வாறு திவாகர் சர்மா தெரிவித்தார்

கேரளாவில் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்தில் கர்ப்பிணி யானைக்கு ெவடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை யாரை வழங்கியதை சாப்பிட்ட யானை தாடை, வாய் பகுதி சேதமடைந்து 2 வாரங்கள் உணவு சாப்பிடமுடியாமல் உயிரிழந்தது. இந்த இரக்கமற்ற சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை முடிவதற்குள் பசுமாட்டிற்கும் இதுபோல் வெடிவைத்துள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x