Published : 07 Jun 2020 07:37 AM
Last Updated : 07 Jun 2020 07:37 AM
பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கவர்ந்திழுக்கும் மோசமான வைரஸை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தில் காலியாக உள்ள4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தலா 2 வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்தடுத்து 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "சுயசார்பு என பாஜக கூறி வருவது தங்கள் கட்சிக்காக மட்டுமே; நாட்டுக்காக அல்ல. பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அக்கட்சி ஏராளமான பணத்தை சம்பாதித்துவிட்டது. தற்போது அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை பாஜகவினர் விலைக்கு வாங்கி வருகின்றனர்.
இதன் மூலம் பிற கட்சி எம்எல்ஏக்களை கவர்ந்திழுக்கும் மோசமான வைரஸை பாஜக பரப்பி வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT