Published : 06 Jun 2020 10:05 PM
Last Updated : 06 Jun 2020 10:05 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. மிகமோசமாக பாதி்க்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டனுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14ஆயிரத்து 72ஆகவும், சிகிச்சை ெபறுவோர் எண்ணிக்கை ஒருலட்சத்து 15 ஆயிரத்து 942 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 294 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 139 பேர், டெல்லியில் 58 பேர், குஜராத்தில் 35 பேர், உ.பி,தமிழகத்தில் தலா 12 பேர் உயிரிழந்தனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,968 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,739 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 37,390 ஆக உயர்ந்துள்ளது. 42,609 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5,37,124 பேருக்கு கரோனா பரிசோதனை நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT