Last Updated : 06 Jun, 2020 06:11 PM

1  

Published : 06 Jun 2020 06:11 PM
Last Updated : 06 Jun 2020 06:11 PM

ஹரியாணா தொழிலாளர்களுடன் கிளம்பி முராதாபாத்திற்கு பதிலாகப் பாதைமாறி அலிகர் பயணம்: சிறப்பு ரயில்களை அடுத்து பேருந்துகளின் முறையா?

கோப்புப் படம்

புதுடெல்லி

ஹரியாணாவில் சிக்கியத் தொழிலாளர்களுடன் முராதாபாத் செல்ல வேண்டிய ஒரு பேருந்து இன்று அலிகர் சேர்ந்தது. இதனால், சிறப்பு ரயில்கள் பலதும் சமீபத்தில் பாதை மாறிச் சென்றது போல் பேருந்துகள் செய்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த மே 1 முதல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தம் ஊர்களுக்கு போய் சேர மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்காக அதன் சார்பில் பல எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களும் விடப்பட்டன.

இவற்றில் பலவும் பாதை மாறி தாம் செல்ல வேண்டி இடங்கள் அன்றி வேறு ஊர்களுக்கு சென்றடைந்திருந்தன. இதனால், பல மணி நேரம் தாமதமாகி சிறப்பு ரயில்களின் பயணிகள் வெகுவாக சிரமத்திற்கு உள்ளாகின.

இந்தவகையில், அரசு பேருந்துகளும் பாதை மாறி வேறு ஊர்களுக்கு பயணிக்கின்றனவா? என சந்தேகம் கிளம்பியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் இன்று உத்திரப்பிரதேசம் அலிகர் நகரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஊரடங்கினால் உ.பி.யின் கிழக்குப் பகுதியிலுள்ள கோரக்பூர், கோண்டா, குஷிநகர் மற்றும் பஸ்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர் ஹரியாணாவில் சிக்கினர். இவர்களை அம்மாநில அரசு தன் பேருந்துகளில் முராதாபாத் அனுப்பி வைத்தது.

முராதாபாத்தில் இருந்து உ.பி .அரசு பேருந்துகளில் ஏறி தம் ஊர்களுக்கு திரும்புவது அவர்களுக்கான ஏற்பாடு ஆகும். ஹரியாணா மாநில அரசுப் பேருந்தில் ஏற்றப்பட்ட தொழிலாளர்கள் இன்று முராதாபாத் கிளம்பினர்.

ஆனால், பாதை தெரியாமல் வழிமாறிய அப்பேருந்து, அலிகர் வந்து சேர்ந்தது. அது அலிகர் என்பதால் அங்கு இறங்க முடியாது என தொழிலாளர்கள் ஆர்பாட்டம் செய்யத் தொடங்கினர்.

இந்த தகவல் அறிந்து அங்கு உ.பி. மாநில அரசு போக்குவரத்தின் அதிகாரிகளும், காவல்துறையினரும் நேரில் வந்தனர். பிரச்சனையை அறிந்தவர்கள் ஓட்டுநரை சமதானப்படுத்தி அப்பேருந்தை சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள முராதாபாத்திற்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x