Published : 06 Jun 2020 06:01 PM
Last Updated : 06 Jun 2020 06:01 PM
டெல்லி வியாபாரிகள் இடையே கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ரூபாய் நோட்டுகள் காரணமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாடு முழுவதிலும் கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு லாக்டவுன் அமலாக்கி இருந்தது. இதன் நான்காவது முறையான நீட்டிப்பில் லாக்டவுன் தளர்த்துவது குறித்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் அளித்திருந்தது.
இந்நிலையில், தலைநகரான டெல்லியின் முக்கிய வர்த்தகங்கள் திறக்க டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் பழைய டெல்லி பகுதியிலுள்ள மொத்த வியாபாரிகள் சந்தையில் திடீர் என இரண்டு நாட்களாக கரோனா பரவல் கூடி விட்டது.
இதனால், பழைய டெல்லி பகுதியின் சந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களிடம் பெறும் ரொக்கத்தொகைகளை தன் உதடுகளின் ஈரத்தை தொட்டு வியாபாரிகள் எண்ணுவது காரணம் எனக் கருதப்படுகிறது.
இதை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பிலும், சமூகவலைதளங்களிலும் ரூபாய் நோட்டுகளை தொட்ட விரல்களை கழுவாமல் உதடுகளை தொட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் கரோனா பரவுகிறதா என உறுதிசெய்யும்படி அகில இந்திய மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான.ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அக்கடிதத்தில், சாதாரண காலங்களிலேயே சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள் வைரஸ் கிருமிகளை தாங்கி இருப்பதாகக் கருதப்படுவதாகவும், இதனால், கரோனா பரவுமா? என விளக்கும்படியும் கேட்டு எழுதப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆராய்ந்து விளக்குவதுடன் அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விதிமுறைகளை வெளியிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல், சில்லரை காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் மூலம் வைரஸ் கிருமிகள் பரவுவது குறித்து இந்தியாவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவ ஆய்வுப் பிரிவிலும் ஆராயப்பட்டது.
இதில், நூறு ரூபாய் நோட்டுகளில் 98 இலும், 100 சில்லரை காசுகளில் 48 இலும் வைரஸ் கிருமிகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்தவகை ஆய்வுகள் தமிழகம் கற்றும் கர்நாட்காவிலும் கடந்த வருடங்களில் நடைபெற்றுள்ளன.
எனவே, கரோனா வரிரஸ் பரவல் காலத்தில் மீண்டும் அதுபோன்ற ஆய்வு நடத்த வலியுறுத்தல் எழுந்துள்ளது. அகில இந்திய மொத்த வியாபாரிகளின் கடிதத்தின் மீதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT