Published : 06 Jun 2020 05:14 PM
Last Updated : 06 Jun 2020 05:14 PM
கரோனா பரிசோதனைக்காக மொத்தம் 742 அரசு மற்றும் தனியார் பரிசோதனை கூடங்கள் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 611 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 73 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நோயாளிகளில் குணமடைவோர் 48..20 சதவிகிதம். தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர், கோவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
நோய்த்தொற்று உள்ளவர்களிடையே கரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யும் திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ICMR மேலும் விரிவுபடுத்தியுள்ளது. பரிசோதனை செய்வதற்கான அரசு ஆய்வுக்கூடங்கள் 520 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வுக்கூடங்கள் 222 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது (மொத்தம் 742). கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 45 24 317.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT