Published : 06 Jun 2020 12:23 PM
Last Updated : 06 Jun 2020 12:23 PM
டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குநர் உட்பட ஊழியர்கள் 5 பேருக்கு கரோனா பாஸி்ட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டது இதையடுத்து அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம் கிருமி நாசினி தெளிப்புக்காக 48 மணிநேரம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது
அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதில் இருவர் ஒப்பந்த ஊழியர்கள். டெல்லி கான் மார்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில்தான் அமலாக்கப்பிரிவு தலைமைஅலுவலகம் அமைந்துள்ளது.
இந்ததளத்தில் உள்ள மற்ற அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது
இதையடுத்து, அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கும் கரோனா பரிசோதனை நேற்று முன்தினம் எடுக்கப்பட்டது. அப்போது, சிறப்பு இயக்குநர் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்கள் அனைவருக்கும் அறிகுறியில்லாத தொற்று இருப்பவர்கள் எனத் தெரியவந்தது
இதுகுறித்த அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ கரோனா பாதிப்புக்கு ஆளான சிறப்பு இயக்குநர், சிறப்பு விசாரணை அதிகாரி உள்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு தொடர்பி்ல் இருந்தவர்களும்தனிமைப்படு்த்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். மத்திய அரசின் விதிமுறைப்படி 48 மணிநேரம் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படும். திங்கள்கிழமை முதல் அலுவலகம் தொடங்கும்” எனத் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT