Last Updated : 06 Jun, 2020 10:47 AM

1  

Published : 06 Jun 2020 10:47 AM
Last Updated : 06 Jun 2020 10:47 AM

உலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி,

கரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா 6-வது இடத்தைப் பிடித்தது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 294 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது

இதன் மூலம் உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இத்தாலியில் கூட கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34ஆயிரத்து 531 ஆக இருக்கிறது.ஆனால், இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. மிகமோசமாக பாதி்க்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின்,பிரிட்டனுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14ஆயிரத்து 72ஆகவும், சிகிச்சை ெபறுவோர் எண்ணிக்கை ஒருலட்சத்து 15 ஆயிரத்து 942 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 294 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 139 பேர், டெல்லியில் 58 பேர், குஜராத்தில் 35 பேர், உ.பி,தமிழகத்தில் தலா 12 பேர் உயிரிழந்தனர்

மேற்கு வங்கத்தில் 11 பேர், தெலங்கானாவில் 8 ேபர், மத்தியப்பிரதேசத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 5 ேபர், ஆந்திராவில் இருவர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட், உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,849 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,190 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 384ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் உயிரிழப்பு 708 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 218 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 113 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 257 ஆகவும், ஆந்திராவில் 73 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 57 பேரும், பஞ்சாப்பில் 48 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 36 பேரும், ஹரியாணாவில் 24 பேரும், பிஹாரில் 29 பேரும், ஒடிசாவில் 8 பேரும், கேரளாவில் 14 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், ஜார்க்கண்டில் 7 பேரும், உத்தரகாண்டில் 11 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 35,156 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 26,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,315 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 19,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,003 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 10,084 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,996 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 9,733 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 7,303 பேரும், ஆந்திராவில் 4,303 பேரும், பஞ்சாப்பில் 2,461 பேரும், தெலங்கானாவில் 3,290பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 3,324 பேர், கர்நாடகாவில் 4,835 பேர், ஹரியாணாவில் 3,597 பேர், பிஹாரில் 4,596 பேர், கேரளாவில் 1,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 712 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 2,608 பேர், சண்டிகரில் 304 பேர் , ஜார்க்கண்டில் 881 பேர், திரிபுராவில் 692 பேர், அசாமில் 2,153 பேர், உத்தரகாண்டில் 1,215 பேர், சத்தீஸ்கரில் 879 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 393 பேர், லடாக்கில் 97 பேர், நாகாலாந்தில் 94 பேர், மேகாலயாவில் 33 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 36 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 22 பேர், சிக்கிமில் 3ேபர், மணிப்பூரில் 132 பேர், கோவாவில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x