Published : 06 Jun 2020 08:07 AM
Last Updated : 06 Jun 2020 08:07 AM
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது, மேலும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் போன்றவையும் 9-ம் தேதி முதல் செயல்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்
சபரிமலைக்கு முதியோர், குழந்தைகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் வழக்கமான பூஜைகள் ேதவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட 4 கட்ட லாக்டவுன் முடிந்து தற்போது லாக்டவுனை நீக்கும் முதல்கட்டம் நடந்து வருகிறது. வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
இதை அடிப்படையாக வைத்து வரும் 9-ம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன, ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களும் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
மாநிலத்தில் வரும்9-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்ள் உள்ளி்ட்டவற்றை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இவை திறக்கப்படுவதறக்கு முதல்நாள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
கோயில்களின் அளவைப்பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும். 100சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள். குழந்தைகள், முதியோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரசாதத்தையும், புனித நீரையும் யாரும் கையால் எந்த கோயிலும் வழங்கக்கூடாது. வரும் 14-ம் தேதி மாலை 5மணிக்கு சபரிமலை கோயில் திறக்கப்பட்டு 19-ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மற்றவகை தேவையான வழிகாட்டுதல்களை தேவஸ்தானம் வரும் நாட்களில் வழங்கும்
சபரிமலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பெயர் உள்ளி்ட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். நிலக்கல், பம்பா, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால், சமூக விலகலைக் கடைபிடித்து 50 இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்தவரை பார்சல் உணவுகளை வழங்க முயற்சிக்க வேண்டும்.
உணவுப்பட்டியல் இருக்கும் மெனுகார்டை ஒரு முறை பயன்படுத்தும் அளவு காகிகத்தில் அச்சிட வேண்டும், அனைத்து இருக்கைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும், உணவகங்களில் பணியாட்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருவதற்கு தனிப்பாதையும், வெளியேற தனிப்பாதையும் அமைக்க வேண்டும். இரு பாதைகளிலும் சானிடைசர் ைவக்கப்பட வேண்டும் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பொருட்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்
கேரளாவில் வழிபாட்டுதலங்கள், ரெஸ்டாரண்ட் திறப்பதற்கு இந்திய மருத்து கழகம்(ஐஎம்ஏ) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது
. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்தியில் “ வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள தற்போது திறந்தால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்பதால் அரசு அனுமதிக்ககூடாது.
வரும் நாட்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகவும் வாய்ப்புள்ளது. கரோனா நோயாளிகள் அதிகரித்தால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதும் மற்ற நாடுகள், மாநிலங்கள் போல் கடினமாகிவிடும். சுகாதாரத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT