Published : 06 Jun 2020 06:37 AM
Last Updated : 06 Jun 2020 06:37 AM

சீனாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவிக்கும் இந்தியா

புதுடெல்லி

எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், எல்லையில் இந்தியா ராணுவத்தைக் குவித்துள்ளது.

லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்த னர். இதைத் தொடர்ந்து பிரச்சினை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இதைப் போல இந்தியாவும் எல்லைப் பகுதி யில் ராணுவத்தைக் குவித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக் கிடையே பதற்றத்தை அதிகரித் துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளி டையே ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர். இதில் தீர்வு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டி னன்ட் ஜெனரல்கள் பாங்காங் டிசோ பகுதியில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் இரு நாடு களுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த பேச்சு வார்த்தைக்கு முன்னதாக எல்லைப் பகுதியில் இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியை ஒட்டி அமைந்துள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதி யில் (எல்ஏசி) இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம் எல்ஏசி பகுதியைத் தாண்டி அமைந்துள்ள 10 கி.மீ. சுற்றளவுள்ள விமானம் பறக்கக்கூடாத பகுதியைத் தாண்டி இந்திய விமானங்கள் பறக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சீன எல்லைக்குட்பட்ட அக்சாய் சின் பகுதியில் கடந்த சில தினங்களாக அந்நாட்டு போர் விமானங் கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. உத்தரா கண்ட், சிக்கிம் பகுதியில் அமைந் துள்ள ராணுவ முகாம்களில் இருந்த வீரர்கள் லடாக் பகுதிக்கு விரைந் துள்ளனர். மேலும் அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், இமாச் சல பிரதேசம், சிக்கிம், லடாக் பகுதியை ஒட்டி அமைந்துள்ள 3,488 கி.மீ. தூரத்திலான சீன எல்லைப் பகுதியில் கண்காணிப்பையும் இந்திய ராணுவம் அதிகரித்துள் ளது. முக்கிய இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆளில்லாத உளவு விமா னங்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வரு கின்றன.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “எல்லைப் பகுதியில் போதிய அளவுக்கு ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லையை ஒட்டி அமைந்துள்ள 4 மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். மேலும் தற்போது எல்லைப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை நாங்கள் அறிவிக்க முடியாது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மட்டுமே இதற்கு பதில் அளிப்பர்” என்றார்.

இதனிடையே, லடாக் அருகே உள்ள எல்லைப் பகுதியில் 4 இடங்களில் பிற நாட்டவர்கள் ஊடுருவும் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன. கல்வான், கோக்ரா, பாங்காங் டிசோ ஏரி உள்ளிட்ட 4 ஊடுருவல் பகுதிகளில் கூடுதல் ராணுவத் தினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பாது காப்புத் துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x