Last Updated : 04 Jun, 2020 10:48 AM

2  

Published : 04 Jun 2020 10:48 AM
Last Updated : 04 Jun 2020 10:48 AM

இதுவரையில்லாத வகையில் ஒரேநாளில் 9,304 பேருக்கு கரோனா: உயிரிழப்பு 6 ஆயிரமாக அதிகரிப்பு; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டவர்கள் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 304 ஆக அதிகிரி்த்துள்ளனர், உயிரிழப்பு 260 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது, சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து737 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 260 பேர் உயிரழந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.

இந்த 260 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 122 பேர், டெல்லியில் 50 பேர், குஜராத்தில் 30 பேர், தமிழகத்தில் 11 பேர் அடங்குவர். மேற்கு வங்கத்தில் 10 பேர், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலங்கானாவில் தலா 7 பேர், ராஜஸ்தானில் 6 பேர், ஆந்திராவில் 4 பேர், பிஹார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,587 ஆக அதிகரித்துள்ளது.அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,122 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 371ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 345 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 606 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 209 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 99 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 229 ஆகவும்,ஆந்திராவில் 68 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 53 பேரும், பஞ்சாப்பில் 45 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 34 பேரும், ஹரியாணாவில் 23 பேரும், பிஹாரில் 25 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 11 பேரும், இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்டில் தலா 5 பேர், உத்தரகாண்டில் 8 பேர், அசாமில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,860 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 32,329 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 23,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,542 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 18,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,212 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 9,652 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,588 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 8,729 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 6,508 பேரும், ஆந்திராவில் 4,080 பேரும், பஞ்சாப்பில் 2,376 பேரும், தெலங்கானாவில் 3,020 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 2,857 பேர், கர்நாடகாவில் 4,063 பேர், ஹரியாணாவில் 2,954 பேர், பிஹாரில் 4,390 பேர், கேரளாவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 651 பேர் குணமடைந்துள்ளனர்

ஒடிசாவில் 2,388 பேர், சண்டிகரில் 688 பேர் , ஜார்க்கண்டில் 752 பேர், திரிபுராவில் 468 பேர், அசாமில் 1,672 பேர், உத்தரகாண்டில் 1,085 பேர், சத்தீஸ்கரில் 668 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 359 பேர், லடாக்கில் 90 பேர், மேகாலயாவில் 33 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 25 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 14 பேர், சிக்கிமி்ல் இருவர், மணிப்பூரில் 118 பேர், கோவாவில் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அருணாச்சலப் பிரதேசத்தில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளி்ல் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x