Published : 03 Jun 2020 05:30 PM
Last Updated : 03 Jun 2020 05:30 PM

வெளிநாட்டினர் இந்தியா வரும் விசா கெடுபிடிகள் தளர்வு; எந்தெந்த துறை; யார் யாருக்கு ?

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

வெளிநாட்டவர்களில் சில பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவதை அனுமதிப்பதற்கான விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்தாக வேண்டிய சில பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்காக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டிய விஷயம் குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்தது. பின்வரும் பிரிவுகளில் உள்ள வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது:

· அட்டவணை குறிக்காத வணிக ரீதியிலான / சிறப்பு விமானத்தில் வணிக விசாவில் (விளையாட்டுகளுக்கான B-3 அல்லாதவை) இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலதிபர்கள்.

· ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட, இந்திய சுகாதாரத் துறை மையங்களில், தொழில்நுணுக்க ரீதியிலான பணியாற்றுவதற்கு வரும் வெளிநாட்டு சுகாதார நிபுணர்கள், சுகாதார ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள். உற்பத்திப் பிரிவுகள், வடிவமைப்புப் பிரிவுகள், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளும், நிதித் துறை சார்ந்த நிறுவனங்களும் (வங்கியியல் மற்றும் வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்கள்) இதில் அடங்கும்.

· வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை இந்தியாவில் நிறுவுதல், பழுதுநீக்குதல், பராமரிப்புப் பணிக்காக, பதிவு செய்யப்பட்ட இந்தியத் தொழில் நிறுவனத்தின் அழைப்பின் பேரில், பயணிக்கும் வெளிநாட்டு தொழில்நுணுக்க நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள். சாதனங்களை நிர்மாணம் செய்தல் அல்லது வாரண்டியில் இருப்பவை, அல்லது விற்பனைக்குப் பிந்தைய சேவை அல்லது வணிக விதிகளின்படி பழுதுநீக்குதலாக அது இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர், தங்கள் தேவைக்கு ஏற்ற புதிய பிசினஸ் விசா அல்லது வேலை பார்ப்பதற்கான விசாவைப் புதிதாக வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள், அலுவலகங்களில் பெறவேண்டும். வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகம், அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்ட நீண்ட காலத்துக்கு பலமுறை வந்து செல்வதற்கான பிசினஸ் விசா வைத்திருக்கும் [விளையாட்டுகளுக்கான B-3 அல்லாதவை] சம்பந்தப்பட்ட இந்தியத் தூதரகம் / அலுவலகங்கள் மூலம் பிசினஸ் விசாவை மறு-செல்லுபடியாக்கம் செய்து கொள்ள வேண்டும். முன்னர் ஏதும் எலெக்ட்ரானிக் விசா பெற்றிருந்தால், அதை வைத்துக் கொண்டு இந்தியாவில் பயணம் மேற்கொள்ள அந்த வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x