Published : 03 Jun 2020 12:22 PM
Last Updated : 03 Jun 2020 12:22 PM
பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 42 கோடி ஏழை மக்கள் ரூ. 53,248 கோடி வரை உதவி பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் கரீப் கல்யாண் உதவித்திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதித்திட்டத்தில் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள் விவசாயிகள் ஆகியோர் இலவச உணவுப்பொருள் மற்றும் நேரடி ரொக்கம் என்று திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதியுதவித் திட்டத்தை விரைவு கதியில் அமல் படுத்தி அதனை மாநில, மத்திய அரசு கண்காணித்து வருகிறது அரசு.
42 கோடி ஏழைமக்கள் ரூ.53,248 கோடி வரை உதவி பெற்றுளனர்.
பிரதமர் கிசான் திட்டத்தின் முதல் தவணையாக 8.19 கோடி பயனாளிகளுக்காக ரூ. 16,394 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.05 கோடி பெண்களுக்கு ரூ.10,029 கோடி தொகை முதல் தவணையாக ஜன் தன் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20.62 கோடி பெண்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10,315 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
அதே போல் 2.81 கோடி முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,814.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
2.3 கோடி கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,312 கோடி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் 65.85 கோடி பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.
ஜூன் 2020-ல் 7.16 மக்களிடையே 3.58 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் சென்றடைந்துள்ளன. 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்பு மாநிலங்களுக்கு, யூனியன்பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரதமர் நலத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 9.25 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக் செய்யப்பட்டு 8.58 கோடி இலவச சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இபிஎஃப்ஓ உறுப்பினர்களில் 16.1 லட்சம் பேர் திருப்பிச் செலுத்த வேண்டியதல்லாத முன் தொகையாக ரூ.4,725 கோடி ஆன் லைன் மூலம் எடுத்துள்ளனர். ரூ.28,729 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் பங்களிப்பில் 24% தொகை 59.23 லட்சம் ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் தொகை ரூ.895.09 கோடி.
இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT