Published : 03 Jun 2020 10:55 AM
Last Updated : 03 Jun 2020 10:55 AM
இந்தியாவில் ஒரே நாளில் 8,909 புதிய கரோனா தொற்றுக்கள் பாதிப்பு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்து 2,07,615 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 217 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சையில் கரோனா நோயாளிகள் 1,01,497 பேர் உள்ளனர், சுமார் 1 லட்சத்து 302 பேர் குணமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் 2026 கரோனா தொற்றுள்ளோரில் 96% பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இதுவரை நாட்டில் 48.31% நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, யுகே, ஸ்பெயின், இத்தாலியை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட கரோனா வைரஸ் நாடுகளில் இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 217 பலிகளில் மகாராஷ்ட்ராவில் 103 பேரும், டெல்லியில் 33 பேரும் குஜராத்தில் 29 பேரும், தமிழகத்தில் 13 பேரும் மேற்கு வங்கத்தில் 10 பேரும் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 6 பேரும், ராஜஸ்தான், உ.பி.யில் முறையே 5 பேரும், தெலங்கானாவில் 4 பேரும் மரணித்துள்ளனர்.
ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தலா 2 பேரும், கேரளா, சண்டிகர், லடாக், பஞ்சாப், உத்தராகண்டில் ஒருவரும் இறந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,815-ல் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 2,465 பேர் மரணித்துள்ளனர். குஜராத் 1092, டெல்லி 556, ம.பி.364, மேற்கு வங்கம் 335, உ.பி.222, ராஜஸ்தான் 203, தமிழ்நாடு 197, தெலங்கனா 92, ஆந்திரா 64 என்று மரண விகிதங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் 52 பேரும், பஞ்சாபில் 46 பேரும், ஜம்மு காஷ்மீரில் 33 பேரும் பிஹாரில் 24 பேரும், ஹரியாணாவில் 23, கேரளாவில் 11 பேரும் மரணமடைந்துள்ளனர். ஒடிசா, உத்தராகண்டில் இதுவரை 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இமாச்சலம், சண்டிகர், ஜார்கண்டு, ஆகிய மாநிலங்களில் இதுவரை முறையே 5 பேரும், அஸாமில் 4 பேரும் மரணமடைந்துள்ளனர்.
70%க்கும் அதிகமான கரோனா மரணங்கள் பிற நோய்களின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT