Published : 02 Jun 2020 05:56 PM
Last Updated : 02 Jun 2020 05:56 PM

கரோனா உயிரிழப்பு; இந்தியாவில் 2.82 சதவீதம் மட்டுமே: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விகிதம் 2.82 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனாவில் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98ஆயிரத்து 706 ஆக இருக்கிறது. கரோனவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95ஆயிரத்து 526 ஆகவும், 97 ஆயிரத்து 581 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. எனினும்
இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விகிதம் 2.82 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,013 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 30,108 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 495ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 13,170 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 20,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,746 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 17,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.10,7809 பேர் குணமடைந்தனர். ராஜஸ்தானில் 8,980 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,283 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 8,075 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆயிரத்து 598 ஆக உள்ளது. எனினும்
இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விகிதம் 2.82 சதவீதமாகவே உள்ளது. பல்வேறு நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவிலேயே மரணமடைவோர் விகிதம் மிக குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x