Published : 01 Jun 2020 10:24 PM
Last Updated : 01 Jun 2020 10:24 PM

கார், இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு: மத்திய அரசின் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி

மோட்டர் கார் மற்றும் மோட்டர் சைக்களில் (Motor Cab/Cycle) வாடகைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அறிவுரைகளை வெளியிட்டது சாலை போக்குவரத்து அமைச்சகம்.

சில பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்டத் தகவல்களைத் தொடர்ந்து சீருந்து/விசையுந்து வாடகைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவுரையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஜூன் 1, 2020-ஆவது தேதியிட்ட RT-11036/09/2020-MVL(pt-1) என்னும் அறிவிப்பின் மூலம் கீழ்கண்டவாறு வெளியிட்டது;-

அ. வணிக வண்டியை ஓட்டும் நபர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்/ சர்வதேச ஓட்டுநர் உரிமம் மற்றும் சீருந்து (படிவம் 3/4 ) அல்லது விசையுந்து (படிவம் 2) ஆகியவற்றை வாடகைக்கு விடுவதற்கான உரிமத்தின் நகலை வைத்திருந்தால் அவரிடம் இருந்து வேறெந்த ஆவணமும் கேட்கக் கூடாது.

ஆ. விசையுந்தை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் மற்றும் அதை இயக்குபவர்களுக்கு உரிமத்தைப் பரிசீலிக்கலாம்.

இ. தொடர்புடைய வரிகளைக் கட்டும் பட்சத்தில், விசையுந்தை வாடகைக்கு விடும் திட்டத்தின் கீழ் உள்ள உரிமம் பெற்ற இரு சக்கர வாகனங்களை மாநிலங்களுக்கிடையே ஓட்ட அனுமதிக்கலாம்.

கார் வாடகைக்கு விடும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை SO 437(E) dated 12.06.1989 மூலமும் விசையுந்தை வாடகைக்கு விடும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை SO 375(E) at 12.05.1997 மூலமும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பெரு நிறுவன அதிகாரிகள், வணிகப் பயணிகள் மற்றும் விடுமுறையில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாடகைச் சீருந்து சேவைகளைப் போலவே இந்த வண்டிகளையும் பயன்படுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x