Last Updated : 01 Jun, 2020 05:34 PM

1  

Published : 01 Jun 2020 05:34 PM
Last Updated : 01 Jun 2020 05:34 PM

ஜூன் 1 முதல் மத்திய போலீஸ் கேன்டீனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக்குத் தடை: உத்தரவைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு

உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி,

ஜூன் 1-ம் தேதி முதல் மத்திய ஆயுதப்படை கேன்டீன் அல்லது மத்திய போலீஸ் கேன்டீனில் உள்நாட்டில் தயாரிக்கப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்து கடந்த 13-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென இன்று திரும்பப் பெற்றுள்ளது.

ஆனால், திரும்பப் பெறும் உத்தரவு கடந்த 29-ம் தேதியே பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இன்றுதான் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கட்டுப்பட்ட 1,700 மத்திய போலீஸ், சிஏபிஎப் கேன்டீன்கள் செயல்படுகின்றன. சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐசிபிபி, சிஎஸ்ஐஎப், என்எஸ்ஜி, எஎஸ்எஸ்பி ஆகிய படைப்பிரிவில் பணியாற்றும் 10 லட்சம் பேர் இதில் உறுப்பினர்களின் 50 லட்சம் குடும்பங்களும் இந்த கேன்டீனில் பொருட்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள 1,700 மத்திய போலீஸ், சிஏபிஎப் கேன்டீனுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரித்த (சுதேசி) பொருட்களை மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும், மற்ற பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. அதற்கான வரையறையைத் தெரிவித்திருந்தது.

அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் உள்நாட்டில் தாயரித்திருந்தால் விற்கலாம். ஆனால் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.

இதனால் ஸ்கெச்சர்ஸ், பெராரோ, ரெட்புல், விக்டோரிநாக்ஸ், சபிலோ ஆகிய நிறுவனங்களின் பொருட்கள் விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களில் டாபர் நிறுவனம், விஐபி இன்டஸ்ட்க்ரீஸ், யுரேகா போர்ப்ஸ், ஜாக்குவார், ஹெச்யுஎல், ஹார்லிக்ஸ், அபாட் ஹெல்த்கேர், பிலிப்ஸ், பானசோனிக், கோல்கெட் பாமாலிவ், கில்லெட், அடிடாஸ், நெஸ்ட்லே, டைமெக்ஸ், சாபாரி சாம்சோனைட், டிடிகே பிரஸ்டிஜ், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு பொருட்கள் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சாக்லேட்கள், கேமராக்கள், மைக்ரோஓவன், செருப்புகள், பிராண்டட் ஷூ போலராய்ட் கேமிரா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி பிறப்பித்த உத்தரவு இன்று நடைமுறைக்கு வந்தது. சில மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x