Published : 31 May 2020 03:03 PM
Last Updated : 31 May 2020 03:03 PM
ஹெர்ட் இம்யூனிட்டி(மந்தை நோய்தடுப்பாற்றல்) முறையை கரோனா வைரஸுக்கு எதிரான போரில் எந்த நாடு கையாண்டாலும் அது அதிக ஆபத்தானதே. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்தது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்ஆய்வுக்குழுவின்(சிஎஸ்ஐஆர்) இயக்குநர் சேகர் மாண்டே தெரிவித்தார்.
ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன?
ஹெர்ட் இம்யூனிஸ்ட்டி முறை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலானோரை தொற்று நோய்க்கு எதிராக நோய்தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல்.
அதாவது, ஒரு கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு குணமடைந்து அதன் மூலம் நோய் தடுப்பாற்றல் பெறுதல் அல்லது தடுப்பூசி போடுதல் மூலம் நோய்தடுப்பாற்றல் பெறுதலாகும் இதன் மூலம் நோய்தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு இந்த நோய் பரவுவது தடுக்கப்படும்.
ஏனென்றால் ஒரு சமூகத்தில் பெரும்பகுதியினர் நோய் தடுப்பாற்றல் கொண்டவர்களாக இருந்துவிட்டால் அவர்கள் மூலம் நோய் பரவாது
ஹெர்ட் இம்யூனிட்டியை தடுப்பூசி மூலம் பெற்றால் அந்த நோய் சமூகத்தில் பரவுவது தடுக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஹெர்ட் இம்யூனிட்டியை இரு முறைகளில் பெறமுடியும். முதல் முறை என்பது, (கரோனா வைரஸ்) தொற்று நோயை அதன் போக்கில் சமூகத்தில் பரவ விட்டு அதன் மூலம் பெரும்பான்மை மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்து அதன் மூலம் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவது
இரண்டாவது, வைரஸ்க்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டறிந்து அதை பெரும்பான்மை மக்களுக்கு செலுத்தி அதன் மூலம் எதிர்ப்பு நோய் எதிர்ப்புச் சக்தி பெறுவது.
இதில் (கரோனா) வைரஸ் வீரியத்தை அறியாமல் அதை சமூகத்தில் பரவ அனுமதித்தால் மிகமோசமான பாதிப்புகள் ஏற்படும், உயிரிழப்புகள் கடுமையாக அதிகரிக்கும். எந்த வயதினரை வைரஸ் குறி வைக்கிறதோ அந்த வயதினரிடம் மிக அதிக மரணங்கள் ஏற்படலாம்.
இதே முறையை பிரிட்டன், இத்தாலி, கையாள முற்பட்டு பெரும் பாதி்ப்பை எதிர்கொண்டன. நோயை சமூகத்தில் பரவவிட்டு நோய் தடுப்பாற்றல் பெறுவது என்பது மிகவும் ஆபத்தான முறையாகும்
இதைத்தான் மத்திய அறிவியல் மற்றும் தொழில்ஆய்வுக்குழுவின்(சிஎஸ்ஐஆர்) இயக்குநர் சேகர் மாண்டே வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஹெர்ட் இம்யூனிட்டி முறையை அமல்படுத்த சாத்தியமிருக்கிறதா என பிடிஐ நிருபர் கேட்ட கேள்வி்க்கு சேகர் மாண்ட பதில் அளித்ததாவது:
மந்தை நோய்தடுப்பாற்றல் இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஆபத்தானதே. அதை ைகயாள்வதும் மிகவும் ஆபத்தானது. அந்த முறையைக் கையாண்டால் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 60 முதல் 70 சதவீதம் மக்கள் கரோனாவில் பாதிக்கபப்டுவார்கள்.
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் உகந்தது அல்ல. குறிப்பிட்ட வயதினரை நோய் குறிவைத்தால் உயிரிழப்பு மோசமாக இருக்கும். அதற்குபதிலாக, நாம் சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
உலகளவில் பல்ேவறு மாதிரிகளை நடைமுறைப்படுத்தி பரிசோதிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ஆலோசனை முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகும்.
மக்கள் தயாராக இருந்து, விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே கரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து, மக்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிடும். மக்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், 2-வது கட்ட கரோனா அலை வரலாம் என்பதால் மக்கள் தயாராக இருக்க வேண்டும்
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 5 கட்ட அம்சங்களை சிஎஸ்ஐஆர் முன்வைக்கிறது. கவனம் செலுத்துதல், கண்காணித்தல், கண்டறிதல், புதிய முறைகள் மூலம் மேம்படுத்துதல், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவுதல் போன்றவற்றை செய்கிறோம்
தடுப்பூசி கண்டுபிடித்தலில் 3 விதமான அணுகுமுறைஇருக்கிறது. அதாவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்கும் பரிசோதனை நாட்டின் மூன்று பகுதிகளில் செய்யப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் அடுத்த 15 நாட்களில் வெளியாகும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன”
இவ்வாறு சேகர் மாண்டே தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT