Published : 31 May 2020 01:28 PM
Last Updated : 31 May 2020 01:28 PM
கரோனா வைரஸ் சிக்கலில் சிக்கி ஏழைகளும், தொழிலாளர்களும் அடைந்த வலியையும், வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
கரோனா வைரஸால் நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதில் குறிப்பாக ஏழைகள், தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கரோனாவில் நமது மன் கி பாத் நிகழ்ச்சி இன்னும் பாதிக்கப்படவில்லை.
கடந்த முறை மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய போது, பயணிகள் ரயில் போக்குவரத்து, பேருந்து, விமானப்போக்குவரத்து இயக்கப்படவி்ல்லை. ஆனால் இந்த முறை தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயில்களும்,சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விமானங்களும் இயக்கப்படுகின்றன.
தொழிற்சாலைகளும் இயல்புநிலைக்கு வந்துவி்ட்டன, பொருளாதாரத்தின் பெரிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் நாம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல் பட வேண்டும்
பொருளாதாரம் பெரும்பகுதி இயக்கத்துக்கு வந்துவிட்டது. சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில் எந்தவிதமான தளர்வும் கிடையாது, முககவசத்தை அனைவரும் அணிய வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் ஆதரவும் இருந்தால்தான் கரோனாவுக்கு எதிரான போரில் வலிமையாகப் போராட முடியும்.
இந்த தேசம் சந்திக்கும் சவால்கள்கூட வித்தியாசமானது. மற்ற நாடுகளில் கரோனா வேகமாகப் பரவியதைப் போல் நம்நாட்டில் வேகமாகப் பரவவில்லை. நமோ செயலி மூலமும், மற்ற ஊடகங்கள் மூலம் ஏராளமானோர் கரோனுவுக்கு எதிராக பல பணிகளைச் செய்துள்ளார்கள்
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் ஏராளமானோர் பங்களிப்பு செய்து வருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த கே.சி.மோகன்,அகர்தலாவைச் சேர்ந்த கவுதம் தாஸ், பதான்கோட்டைச்ச ே்சர்ந்த ராஜூ, நாசிக்கைச்சேர்ந்த ாாஜேந்திர யாதவ், கிராமங்களில் சிறுநகரங்களில் இருக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான முகக்கவசத்தை தயாரித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவிக்கிறேன்
புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக ரயில்களிலும், பேருந்துகளிலும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, குடிநீர் மாவட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்டு முறையான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்சார்பு பொருளாதாரத்தை நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் தற்சார்பு பொருளதாரம் தேசத்தை உயரத்துக்கு கொண்டு செல்லும். இந்த கரோனா காலத்தில் நான் பல உலகத்தலைவர்களுடன் பேசினேன். அவர்களுடன் பேசிய ரகசியத்தை சொல்லப்போகிறேன் அவர்கள் அனைவரும் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் மீதுதான் அதிகமான ஆர்வமாக இருந்ததாக என்னிடம் தெரிவித்தார்கள்
இந்த கரோனா காலத்தில் யோகா மிகவும் முக்கியமானது நண்பர்களே. யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது நமது நுரையீரல் சுவாச பணிகள் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் யோகாவை அனைவரும் கற்கும் நோக்கில் நமது ஆயுஷ் அமைச்சகம் பல ஏற்பாடுகளைச் செய்தது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா காணொலிப் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயணாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துவிட்டது. இதில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பெருமைக்குரியது. இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் மூலம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் எந்த மாநிலத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றாலும் ஒரே தரமான சிகிச்சைதான் அளிக்கப்படும்.
ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல்தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த ஆண்டு கருப்பொருள் பல்லுயிர் ஆகும். இப்போது இருக்கும் நிலையில் அவசியமான கருப்பொருள். நீர் மேலாண்மை மிகவும் முக்கியம். சுத்தமான சுற்றுப்புறச்சூழல் நமக்கு மட்டும் முக்கியமல்ல, நம்முடைய சந்ததியினருக்கும் அவசியமானது.
இ்வ்வாறு பிரதமர்மோடி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT