Last Updated : 31 May, 2020 12:35 PM

11  

Published : 31 May 2020 12:35 PM
Last Updated : 31 May 2020 12:35 PM

ஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா பாதிப்பு பெரிதாகாமல் தவிர்த்திருக்கலாம்: பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுர்கள் குழு அறிக்கை

படம்: பிடிஐ

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டு வருவற்கு முன்பே, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கரோனாவில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்படுவதை தவிர்த்திருக்கலாம், பரவலின் வேகத்தையும் குறைத்திருக்கலாம் என்று பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு அறிக்கை அனுப்பியுள்ளனர்

இந்த அறிக்கையை எயம்ஸ், ேஜஎன்யு, பிஹெச்யு, இந்திய பொதுசுகாதார அமைப்பு(ஐபிஹெச்ஏ), இந்திய சமூக நோய்தடுப்பு அமைப்பு(ஐஏபிஎஸ்எம்), இந்திய தொற்றுநோய் தடுப்புஅமைப்பு(ஐஏஇ) ஆகியோர் சேர்ந்து அறிக்கை தயாரித்து பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லாக்டவுன் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கும் போது 606 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் லாக்டவுனின் 4-வது கட்டம் முடியும் போது, மே 24-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை ரயில்களிலும், சாலையில் நடந்தும், சைக்கிளிலும் செல்லும் போது, அவர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகி நாட்டின் மூலை முடுக்கிற்கெல்லாம் கரோனாவை கொண்டு செல்கிறார்கள்.

குறிப்பாக கிராமப்புறங்களுக்கும், புறநகர்பகுதிகளுக்கும், குறைவான பாதிப்பு இருக்கும், மருத்துவ வசதி குறைவா இருக்கும் மாவட்டங்களுக்கும் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் நோய்தொற்றைக் கொண்டு செல்கிறார்கள்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டு வருவற்கு முன்பே, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கரோனாவில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்படுவதை தவிர்த்திருக்கலாம், பரவலின் வேகத்தையும் குறைத்திருக்கலாம்.

நோய் பரவுதல், நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த லாக்டவுன் மாதிரிகள்(மாடல்கள்) பற்றி நன்கு புரிந்துகொள்ளக்கூடிய தொற்றுநோயியல் நிபுணர்களை இந்திய அரசு கலந்தாலோசித்திருந்தால், இன்னும் சிறப்பாக லாக்டவுனை செயல்படுத்தி இருக்கலாம்.

பொது களத்தில் கிடைக்கக்கூடிய குறைந்த தகவல்களிலிருந்து, வரையறுக்கப்பட்ட களப் பயிற்சி மற்றும் திறன்களுடன் உள்ள மருத்துவர்கள் மற்றும் கல்வி தொற்று நோயியல் நிபுணர்களால் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.

நிர்வாகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையே பெரிதும் ஆட்சியாளர்கள் நம்பியிருந்தனர். தொற்றுநோய், பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக விஞ்ஞானிகள் போன்ற துறைகளில் நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அரசின் ஈடுபாடு குறைவாக இருந்தது.

இதன்காரணமாகவே மனிதநேயச் சிக்கல் மற்றும் நோய் பரவலில் மிகப்பெரிய விலையை இந்தியா அளித்து வருகிறது. குறிப்பாக ேதசிய அளவில் பொருத்தமற்ற, அடிக்கடி மாறும் நிலைப்பாடுகள், கொள்கைகள் போன்றவை தொற்றுநோய்தடுப்பு வல்லுநர்கள் மனநிலையில் சிந்திக்காமல், ஆட்சியாளர்களின் ஒரு ’பகுதி மனநிலையிலேயே’ இருக்கிறது.

இ்ப்போது மக்கள் கரோனாவால் சந்தித்துவரும் சிக்கல், உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளைக் களைய மாவட்டம், மாநிலம் அளவில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு சுகாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் குழுவை உருவாக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருத்தால்தான் ஆய்வு செய்பவர்களால் எளிதாக அணுகமுடியும். அதை தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, நோயின் தீவிரம், அதைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகளை கண்டறிய முடியும்.

மக்களிடையே தீவிரமாக சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்துவது கரோனா பரவல் வேகத்தைக் குறைக்கும்.அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும், மக்களுக்கு விழிப்புணர்வும் தேவை.

இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்களைக் கண்டறிந்து தொடர்ந்து சிகிச்சையளித்தல், கண்காணித்தல், கண்டுபிடித்து தனிமைப்படுத்துதலை தொடர்ந்து செய்ய வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x