Published : 31 May 2020 07:17 AM
Last Updated : 31 May 2020 07:17 AM
சமூக ஊடகங்களில் நீதித்துறை அவமதிக்கப்படுவது தொடர்பான ஆன்லைன் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே பேசியதாவது:
தீர்ப்பு ஒரு கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது என்றோ அல்லது நீதிபதி ஒரு கட்சிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார் என்றோ கூறுவது தவறு. உச்ச நீதிமன்றம் ஈட்டி எறியும் பலகை அல்ல. நீதிபதி பழமைவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக ஒரு தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கலாம். தீர்ப்பை அல்லது நீதிபதியை விமர்சிக்கும்போது, தீர்ப்புக்கான நோக்கங்களை கற்பிப்பது தவறு.
சிலர் நிவாரணப் பணிகளுக்காக உச்ச நீதிமன்றம் செல்கின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்புவராதபோது, இந்த காரணத்துக்காக நீதிபதிகள் இதை செய்யவில்லை என்கின்றனர். சிலர் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இருப்பதாக கூறி, அதன் வரம்பை விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். மக்களால் தேர்வுசெய்யப்படாத பலர், நீதிமன்றங்கள் மூலம் அரசுக்கு அழுத்தம் தருகின்றனர். குறிப்பாக, அரசை ஒரு செயலைசெய்யவைத்து, அதன்மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நினைக்கின்றனர். இவ்வாறு ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT