Published : 30 May 2020 11:37 AM
Last Updated : 30 May 2020 11:37 AM
மேலும் 2 வாரங்களுக்கு கரோனா லாக்டவுன் 5.0-வை நீட்டிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கரோனா தொற்றுக்கள் விகிதத்தில் 70% பங்களிப்புச் செய்யும் 13 நகரங்களில் கண்டிப்பான, கறாரான லாக்டவுன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிட மத்திய அரசு தயாராகி வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவுள்ளது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது மாநில முதல்வர்கள் அளித்த தகவல்களை பிரதமருடன் விவாதித்தார். முதலில் அமித் ஷா மாநில முதல்வர்களுடன் ஆலோசித்தார்.
மெட்ரோ ரயில்கள் இல்லை:
அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் மால்கள், உணவு விடுதிகளுக்கு ஏற்கெனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது.
நகரங்களில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்வதால் மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.
மும்பை, சென்னை, டெல்லி/புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஹைதராபாத், கொல்கத்தா/ஹவுரா, இந்தூர், ஜெய்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 13 மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மேலும் கறாரான லாக்டவுன் நடைமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும், எந்த நிலையிலும் அதை தளர்த்துவது கூடாது என்று அறிவுறுத்தப்படும்.
கரோனா லாக்டவுன் 4.0-வில் சந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளே நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT