Published : 30 May 2020 11:18 AM
Last Updated : 30 May 2020 11:18 AM
இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 265 பேர் உயிரிழந்துள்ளனர், ஏறக்குறைய 8ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை 82ஆயிரத்து369ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர்.
265 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 4ஆயிரத்து971 ஆக அதிகரித்து, சீனாவின் பலியை மிஞ்சியுள்ளது இந்தியா. கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் 47ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 116 பேர், டெல்லியில் 82 பேர், குஜராத்தில் 20 பேர், மத்தியப்பிரதேசத்தில் 13 பேர், தமிழகத்தில் 9 பேர், மேற்குவங்கத்தில் 7 பேர், தெலங்கானா, ராஜஸ்தானில் தலா 4 பேர், பஞ்சாபில் 2 பேர், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 980 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 334 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 398ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 184 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 71 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 198 ஆகவும், ஆந்திராவில் 60ஆகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் 48 பேரும், பஞ்சாப்பில் 42 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 28 பேரும், ஹரியாணாவில் 19 பேரும், பிஹாரில் 15 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 8 பேரும், இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்டில் தலா 5 பேர், அசாமில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 26,997 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 246ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 17,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,846 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 15,934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,611 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 8,365 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 7,645 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,284 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 4,813 பேரும், ஆந்திராவில் 3,436 பேரும், பஞ்சாப்பில் 2,197 பேரும், தெலங்கானாவில் 2,425 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 2,164 பேர், கர்நாடகாவில் 2,781 பேர், ஹரியாணாவில் 1,721 பேர், பிஹாரில் 3,376 பேர், கேரளாவில் 1150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 565 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 1,723 பேர், சண்டிகரில் 289 பேர் , ஜார்க்கண்டில் 511 பேர், திரிபுராவில் 251 பேர், அசாமில் 1,024 பேர், உத்தரகாண்டில் 716 பேர், சத்தீஸ்கரில் 415 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 295 பேர், லடாக்கில் 74 பேர், மேகாலயாவில் 27 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 14 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 59 பேர், கோவாவில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், மிசோரத்தில் அருணாச்சலப் பிரதேசமில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT