Published : 30 May 2020 09:02 AM
Last Updated : 30 May 2020 09:02 AM
கரோனா வைரஸ் லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள், துன்பங்கள் வேதனைகள் இன்னும் தொடர்ந்தால், அவர்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கும் திட்டத்தை பரிசீலிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தற்போது ஏழைகள், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து அவர்களை மீட்க நேரடியாக பணத்தை வழங்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாலர்கள் கால்நடையாகவும், ைசக்கிள்களிலும், ரயில்களிலும் சொந்த ஊர் சென்று வருகின்றனர்.
ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், இன்னும் முழுமையாக தொழிற்சாலைகள், சிறு குறுந்தொழில்கள் இயக்கத்துக்கு வரவில்லை. இதனால் வேலையிழந்த தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியில்லாமல், வறுமையிலும், பட்டிணியிலும் சிக்கும் அவலம் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து, கரோனா வைரஸால் வேலையிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியலிட மத்திய தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவரிடம், “நிதிப்பற்றாக்குறையைப் போக்க அதிகமான பணத்த அச்சடித்து மக்களுக்கு வழங்கப்போகிறதா அரசு” என்று கேட்டபோது அதற்கு அவர் “ அதற்கான சூழல் வந்தவுன் அந்த முயற்சியும் எடுக்கப்படும். இப்போதுள்ள சூழலில் ஏழைகள், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்ந்தால் அவர்களை மீ்ட்க நேரடியாக கையில் பணத்தைக் கொடுப்பதுதான் தீர்வாக இருக்கும். ஆனால் அதுகுறித்த திட்டம் பரிசீலனையில் இருக்கிறது முடிவெடுக்வில்லை, அந்த சூழலும் வரவில்லை.
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு திட்டம் மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டது.இதை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. இன்னும் அதிகமான சீர்திருத்தங்கள் நடக்கும், இப்போதுள்ள சூழலில் அவசியம்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT