Last Updated : 29 May, 2020 02:04 PM

24  

Published : 29 May 2020 02:04 PM
Last Updated : 29 May 2020 02:04 PM

எல்லையில் என்ன நடக்கிறது? மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் இந்தியா சீனா இடைேய என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

லடாக்கில் உள்ள தவுலத் பெக் ஓல்டே எனும் இடத்தில் அதாவது இந்தியாவின் கடைசி எல்லையான காரகோரம் பகுதிக்குமுன் இந்தியா பாலம் கட்டி வருகிறது.இதற்கு சீனா தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லைப்பகுதியியில் கடந்த சிலநாட்களாக சீன ராணுவம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. பதிலுக்கு இந்தியாவும் ஏராளமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீர்களும் ஏறக்குறைய 250 பேர் கைகலப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதன்பின் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அமர்ந்து அமைதிப் பேச்சு நடத்தியபின் அமைதி திரும்பியது.

இந்நிலையில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளைக்குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலைக் கவனித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு மத்தியஅரசு சார்பி்ல் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்சினையை அமைதிப்பேச்சின் மூலம் பேசித் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யான ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் என்ன நடக்கிறது. எல்லைப்பகுதியில் நடப்பது குறி்த்து மத்திய அரசு மவுனம் காப்பது நெருக்கடியான இந்நேரத்தில் பல்ேவறு சந்தேகங்களையும், நிச்சயமற்றதன்மையையும் ஏற்படுத்துகிறது. உண்மையில் எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு, உண்மையானமுறையில் மத்தியஅரசு தெளிவுபடுத்த வேண்டும்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x