மாநிலங்களவை ஊழியருக்கு கரோனா தொற்று: நாடாளுமன்றத்தின் இரு இணைப்பு கட்டிடங்களுக்கும் சீல் வைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாடாளுமன்ற மாநிலங்களவையின் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றுஇருப்பதுஉறுதியானதால், நாடாளுமன்றத்தின் இரு இணைப்பு கட்டிடங்களும் கிருமிநாசினி தெளிப்புக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

நாடாளுமன்றத்தில் பணிபுரிவோரில் 4-வது நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் 3 ஊழியர்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த 2-வது கட்ட லாக்டவுன் முடிந்து மீண்டும் மே 3-ம் தேதி முதல் ஊழியர்கள் நாடாளுமன்றத்துக்கு பணிக்கு வந்தனர். அப்போது 3 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட ஊழியர் மாநிலங்களவையின் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு கரோனா இருந்ததால், அவர்களுடன் இவரும் தொடர்பில் இருந்ததால் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிகாரி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் மக்களவையில் மொழிமாற்றம் செய்யும் பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் முதல்முறையாக, அங்கு பணிபுரியும் துப்புறவு தொழிலாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. பட்ெஜட் கூட்டத்தொடர் முடிந்தபின், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது, அதன்பின் பாதுகாவலர் ஒருவருக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மாநிலங்களவை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும்ஊழியர் ஒருவருக்கு கரோனா ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருப்பதால், இரு இணைப்பு கட்டிங்களிலும் கிருமி நாசினி தெளி்ப்புக்காக மூடப்பட்டுள்ளது.இதன்காரணமாக, கிரிஷி பவன், சாஸ்திரி பவன், நிதிஆயோக் ஆகிய கட்டிடங்கள் கிருமநாசினி தெளி்ப்புக்காக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in