Published : 29 May 2020 10:19 AM
Last Updated : 29 May 2020 10:19 AM
எல்லை விவகாரத்தில் சீனா மீது பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று பிரதமர் மோடியிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் பிரதமர் மோடியும்,அதிபர் ட்ரம்ப்பும் பேசிக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவின் சிக்கிம், லடாக் மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது, இந்தியாவும் எல்லைப்பகுதியி்ல் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்போது இந்தியா, சீனா எல்லை பிரச்சினையிலும் தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதாக தெரிவித்தார். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது
இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய முரண்பாடும்,மோதலும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் மக்கள் என்னை விரும்புகிறார்கள். அமெரிக்காவில் ஊடகங்கள் என்னை விரும்புவதைவிட, இந்தியாவில் இருப்பவர்கள் என்னை அதிகமாக விரும்புகிறார்கள். எனக்கும் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். மோடி சிறந்த ஜென்டில்மேன்.
இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய மோதல் நிலவுகிறது. இரு நாடுகளுமே 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகள், இரு நாடுகளிடமும் வலிமையான ராணுவம் இருக்கிறது. ஆனால், எல்லை விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவுக்கு மகிழ்ச்சி இல்லை.
நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். எல்லை விவகாரத்தில் சீனாவுடன் பிரதமர் மோடி நல்ல மனநிலையில்இல்லை” என தெரிவித்தார்.
ஆனால், அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்துக்குப்பின் இருவரும் தொலைப்பேசி வாயிலாகப் பேசிக்கொள்ளாதபோது எவ்வாறு அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல்தீவிரமடைந்த போது, இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வாங்குவதற்காக பிரமதர் மோடியைத் தொடர்பு கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசினார். கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இருதலைவர்களுக்கும் இடையே தொலைப்பேசி உரையாடல் நடந்ததாக மத்திய அர வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன.
இந்த உரையாடலுக்குப்பின் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் தொலைப்பேசியில் பேசிக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் போது பிரதமர் மோடியிடம் பேசினேன். எல்லை விவகாரத்தில் சீனாமீது நல்ல மனநிலையில் பிரதமர் மோடிஇல்லை என்று அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது பல்ேவறு சந்தேகங்களை எழுப்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT