Published : 28 May 2020 07:17 AM
Last Updated : 28 May 2020 07:17 AM

5-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி

ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும். இந்த ஊரடங்கின் கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்கட்டமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்கள் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி நிறைவடைந்த நிலையில் 2-ம் கட்டமாக மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

மே 3-ம் தேதி ஊரடங்கு நிறை வடைந்த நிலையில் 3-ம் கட்டமாக மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி ஊரடங்கு நிறை வடைந்த நிலையில் 4-ம் கட்ட மாக மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட ஊரடங்கின் போதே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தனியார் அலு வலகங்கள் 33 சதவீத ஊழியர்களு டன் இயங்கலாம். கரோனா வைரஸ் தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் 50 சதவீத பயணி களுடன் பேருந்தை இயக்கலாம். பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநர், 2 பயணிகள் பயணம் செய்யலாம் என்பன உள்ளிட்ட தளர்வுகள் அமல் செய்யப்பட்டன.

நான்காம் கட்ட ஊரடங்கின் போது மேலும் பல்வேறு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மாநிலங் களுக்கு இடையில் பயணிகள் பேருந்துகளை இயக்கலாம். அத்தி யாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்கலாம். மாணவ, மாணவியருக்கு ஆன்லைனில் பாடம் நடத்தலாம். விளையாட்டு மைதானங்களில் வீரர்கள் பயிற்சி பெறலாம். நோய்த்தொற்று பகுதி தவிர இதர இடங்களில் முடித் திருத்தகங்கள் செயல்படலாம் என்பன உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக கடந்த மே 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 200 சிறப்பு ரயில் கள் இயக்கப்பட உள்ளன. பொருளா தாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடியிலான வளர்ச்சித் திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் வழி பாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக வளாகங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருக் கிறது. ஆன்மிக, சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந் தாலும் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதி நிறைவடைகிறது. இதன் பிறகு ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் ஊரடங் கில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடு கள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க வாய்ப்பு வழங்கப் படும் என்றும் மத்திய அரசு வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "மாநிலங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் கட்டுப் பாடுகளை விதிக்கலாம், தளர்வு களை அமல்படுத்தலாம்" என்றார்.

உத்தர பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் நேற்று கூறும்போது, "5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும். எனி னும் பொதுமக்கள் சமூக இடை வெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக் கும் வரை சில கட்டுப்பாடுகள் தொடர்வது அவசியமாகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x