Published : 27 May 2020 03:27 PM
Last Updated : 27 May 2020 03:27 PM
நிஜமுத்தீன் மர்காஸ் தப்லீக் ஜமாத் மத நிகழ்வில் கலந்து கொண்ட 294 அயல்நாட்டினர் மீது கூடுதலாக 15 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் முடிவெடுத்துள்ளது.
கோவிட்-19 விதிமுறை மீறல், விசா நிபந்தனைகள் மீறல் மற்றும் மிஷனரி வேலைகளில் ஈடுபட்டது தொடர்பாக இந்த கூடுதல் 15 குற்றப்பத்திரிகைகள் இருக்கும் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சாக்கே நீதிமன்றத்தில் 294 அயல்நாட்டினர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இவர்கள் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாள், இலங்கை மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று டெல்லி போலீஸ் 82 அயல்நாட்டினர் மீது 20 குற்றப்பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்தனர்,
கடந்த மார்ச் மாதம் தப்லீகி ஜமாத் மத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது, பிற்பாடு நிஜமுத்தின் கரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்தது.
இதில் பங்கேற்றவர்களில் சிலருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது, இவர்கள் நாடு முழுதும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 25,500 பேர் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT