Published : 27 May 2020 09:54 AM
Last Updated : 27 May 2020 09:54 AM
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று, மே.,27 காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 6வது நாளாக கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
மாநிலவாரியாக பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை வருமாறு:
மஹாராஷ்டிரா பாதிப்பு 54,758 - பலி எண்ணிக்கை 1,792
தமிழகம் - பாதிப்பு17,728 - பலி எண்ணிக்கை 127
குஜராத் பாதிப்பு 14,821 - பலி எண்ணிக்கை 915
டில்லி பாதிப்பு 14,465 -பலி எண்ணிக்கை 288
ராஜஸ்தான் பாதிப்பு 7,536 - பலி எண்ணிக்கை 170
மத்திய பிரதேசம் பாதிப்பு 7,024 - பலி எண்ணிக்கை 305
ஆந்திரா பாதிப்பு3,171 - பலி எண்ணிக்கை 57
கர்நாடகா பாதிப்பு 2,283 - பலி எண்ணிக்கை 44
தெலங்கானா பாதிப்பு 1,991 -பலி எண்ணிக்கை 57
கேரளா பாதிப்பு 963 - பலி எண்ணிக்கை 6
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT