Published : 26 May 2020 05:38 PM
Last Updated : 26 May 2020 05:38 PM

வேகமெடுக்கும் கங்கோத்ரி- பத்ரிநாத் சாலை அமைக்கும் பணி; 3 மாதங்களுக்கு முன்பே முடிந்த திட்டம்

புதுடெல்லி

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நிதின்கட்கரி, சார்தாம் பரியோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பா சுரங்கப்பாதையை காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

ரிஷிகேஷ் - தராசு தேசிய நெடுஞ்சாலையில் (NH94) பரபரப்பான சம்பா நகருக்கு கீழே 440 மீட்டர் நீளத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் முக்கிய மைல்கல் இலக்கை எல்லை ரோடுகள் நிறுவனம் சாதித்துள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் மற்றும் தேசிய அளவிலான முடக்கம் ஆகியவற்றுக்கு இடையே இந்த சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. இலகுவான மண் அமைப்பு, தொடர் நீர் கசிவு, சுரங்கப்பாதைக்கு மேலே பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடியும் வாய்ப்பு, நிலம் கையகப்படுத்துதல் பிரச்னை, கோவிட் முடக்க கட்டுப்பாடுகள் போன்றவற்றை கடந்து இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டது சவாலான பணி ஆகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறுகையில், சமூகப் பொருளாதாரம் மற்றும் சமய நோக்கில் உத்தரகாண்ட்டில் உள்ள ரிஷிகேஷ்-தராசு-கங்கோத்ரி சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். இந்த சுரங்கப்பாதையை திறப்பது, சம்பா நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் மற்றும் தூரத்தையும் ஒரு கிலோ மீட்டர் குறைக்கும்.

மேலும், முன்பு 30 நிமிடங்களாக இருந்த, சம்பா நகரின் பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 10 நிமிடங்கள்தான் ஆகும். மிகவும் சிக்கலான பகுதிகளில், சிக்கலான திட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்யும் எல்லை ரோடுகள் அமைப்பை நிதின் கட்கரி பாராட்டினார். இத்திட்டம் 2020ம் ஆண்டு அக்டோபரில் தான் முடியும் என தன்னிடம் கூறப்பட்டிருந்ததாக அமைச்சர் கூறினார். அதாவது, திட்டமிடப்பட்ட காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பாக இது முடிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சார்தாம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.12,000 கோடி செலவில் 889 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் எல்லை

ரோடுகள் நிறுவனம், புனிதத் தலமான கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத்துக்கும் செல்லும் தேசிய நெடுங்சாலையில் 250 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கிறது. பெரும்பாலான பணிகள் திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே நடந்து கொண்டிருக்கின்றன. 4 திட்டங்களை இந்தாண்டு அக்டோபருக்குள் முடிக்க எல்லைகள் ரோடு அமைப்பு திட்டமிட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x