Published : 26 May 2020 05:18 PM
Last Updated : 26 May 2020 05:18 PM
விடுதிகள் மற்றும் இதர இல்லங்களுக்கான அனுமதி/வகைப்பாட்டுக்கான செல்லுபடியாகும் காலம் 2020 ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் தரத்துடன் விடுதிகளை நட்சத்திர மதிப்பீட்டின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் வகைப்படுத்துகிறது. இந்த முறையின் கீழ், விடுதிகள் ஒரு நட்சத்திரம் முதல் 3 நட்சத்திரம் வரையும், நான்கு மற்றும் 5 நட்சத்திர விடுதிகள் மது வசதியுடன் அல்லது மது வசதி இல்லாமல், ஐந்து நட்சத்திரம் டீலக்ஸ், ஹெரிடேஜ்(பேசிக்), ஹெரிடேஜ் (கிளாசிக்), ஹெரிடேஜ் (கிராண்ட்), லெகசி வின்ட்டேஜ்(பேசிக்), லெகசி வின்ட்டேஜ்(கிளாசிக்), லெகசி வின்ட்டேஜ்(கிராண்ட்) மற்றும் அடுக்குமாடி விடுதிகள், தங்கும் இல்லங்கள், விருந்தினர் இல்லங்கள் போன்றவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
கோவிட்-19 தொற்று மற்றும் முடக்கத்தால், விடுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பல் தொழிலுக்கான மிகவும் சிக்கலான நேரத்தைக் கருத்தில் கொண்டு, விடுதிகள் மற்றும் இதர இல்லங்களுக்கான அனுமதி, சான்றிதழ், திட்ட அனுமதி, மறு அனுமதி மற்றும் வகைப்பாடு, மறுவகைப்பாடு ஆகியவற்றுக்கான செல்லுபடியாகும் காலம் முடிவடைந்திருந்தால் அல்லது முடிவடையும் நிலையில் இருந்தால் (24.03.2020 முதல் 29.6.2020வரை) அதற்கான தேதியை 30.06.2020ம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சுற்றுலா முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சாகச சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் போன்றோரை அனுமதிப்பதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டம் வைத்துள்ளது. இது இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும், சுற்றுலா சேவைகளின் தரத்தை ஊக்குவிக்கும்.
கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, மார்ச் 2020 முதலான முடக்க காலத்தில், ஆய்வுப் பணி மற்றும் விண்ணப்ப ஆய்வு ஆகியவை ஒத்திப் போடப்பட்டதால், அனைத்துப் பிரிவு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கும், (உள்ளூர், உள்நாட்டு, சாகசம்), சுற்றுலா முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து ஏற்பாட்டாளர்களுக்கான அனுமதியை சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 6 மாத காலம் தளர்வு வழங்க சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT