Published : 26 May 2020 07:28 AM
Last Updated : 26 May 2020 07:28 AM

திருமணத்தின்போது பட்டுத் துணியால் ஆன முகக் கவசத்தை அணிந்த அசாம் மணமக்கள்

பட்டுத் துணியால் ஆன முகக்கவசத்துடன் மணமக்கள்.

குவாஹாட்டி:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது கூட மணமக்கள் முகக் கவசம் அணிந்தபடி பங்கேற்கின்றனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள், கையால் நெய்யப்பட்ட பட்டுத் துணி முகக் கவசத்தை அணிந்து பங்கேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வகை முகக் கவசத்தை வடிவமைத்த நந்தினி போர்காகட்டி கூறும்போது, “இந்த முகக் கவசத்தை பாட் வகை பட்டுத் துணியில் உருவாக்கினேன். பெரும்பாலான மக்கள் தற்போது கரோனாவிலிருந்து தப்பிப்பதற்காக சர்ஜிக்கல் வகை முகக் கவசத்தை அணிகின்றனர். அதைத் தவிர்க்கவே இந்த பட்டு முகக் கவசத்தை உருவாக்கினேன்.

துணியால் ஆன முகக் கவசத்தை மக்கள் அணிவதை ஊக்கப்படுத்தவே இதைத் தயார் செய்தோம். முகக் கவசத்திலிருந்து பட்டு நூல்களால் தொங்கட்டான்களையும் உருவாக்கினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x