Published : 25 May 2020 05:20 PM
Last Updated : 25 May 2020 05:20 PM
கரோனா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவை, இந்திய விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இன்னொரு தாக்குதல் வெட்டுக்கிளி தாக்குதலாகும்.
இதனையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு வளர்ச்சித் துறை விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
உ.பி. கரும்பு ஆணையர் சஞ்சய் பூஸ்ரெட்டி அனைத்து துறை அதிகாரிகளுக்கும், கரும்பு ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதாவது விவசாயிகள் மத்தியில் கரும்புகளுக்கு வெட்டுக்கிளிகளால் ஆபத்து அதிகம் எனவே செய்யத்தக்கன, செய்ய தகாதவை குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கிராமங்கள் அனைத்துக்கும் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் சென்று விவசாயிகளுக்கு இந்தப் பிரச்சினைகளையும் வெட்டுக்கிளி தாக்குதல் விளைவுகளையும் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
வயல்களின் எல்லைகளில் புற்கள் இருந்தால் முதலில் வெட்டி எறியப்பட வேண்டும் ஏனெனில் அதில்தான் வெட்டுக்கிளிகள் முட்டையிடும் மேஉம் வெட்டுக்கிளிகளை பார்த்தால் உடனே பூச்சி மருந்துகளை தெளிக்க வேண்டும். உடனே அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வெட்டுக்கிளிகள் பெரும் சப்தத்தைக் கண்டு அஞ்சும் என்பதால் அவை பெரிய அளவில் புலம்பெயர்ந்து வரும்போது பெரிய அளவில் தாரைத்தப்பட்டை, ட்ரம்ஸ் என்று அடித்து சப்தத்தை அதிகரிக்க வேண்டும் அப்போது அது பறந்து போய்விடும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது உ.பி.அரசு.
இந்த கோடையில் பெரிய சைஸ் வெட்டுக்கிளிகள் தாக்குதல்- உணவுக்கு நெருக்கடி?
ஹெச்.ஓ.ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் தொடங்கி வரும் வழியில் வெட்டுக்கிளி வளர்ப்புப் பகுதியிலிருந்து வெட்டுக்கிளிகள் ஏமன், பஹ்ரைன், குவைத், கத்தார், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாட்டின் வயல்வெளிகளைத் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா நிலங்கள் மற்றும் கங்கை சமவெளியைத் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் மேல் கடக்கும் இன்னொரு வெட்டுக்கிளி கூட்டம் இந்திய தீபகற்பப் பகுதியின் பண்ணை நிலங்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிருந்து வங்கதேசம் செல்லும் என்று கூறப்படுகிறது.
வெட்டுக்கிளி கூட்டம் என்றால் சாதாரணம் கிடையாது ஒரு சதுர கிமீ பரப்புக்கு குறைவான பரப்பிலிருந்து பலநூறு கிமீ பரப்பளவுக்கான வெட்டுக்கிளி கூட்டம் என்பது சாதாரணம் கிடையாது என்று உணவு மற்றும் வேளாண் அமைப்பு தன் இணையதளத்தில் கூறியுள்ளது. ஒரு சதுர கிமீ பரப்பு கொண்ட வெட்டுக்கிளி கூட்டத்தில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒரே நாளில் இவை 35,000 பேர் சாப்பிடும் உணவைத் தின்று தீர்த்து விடும். அதாவது ஒரு தனிநபர் நாளொன்றுக்கு 2.3கிலோ உணவு சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால்.
ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளுக்கு இந்த வெட்டுக்கிளி தாக்குதல் என்ற பேராபத்து இருப்பதாக உணவு மற்றும் வேளாண் கழகம் கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT