Published : 25 May 2020 06:38 AM
Last Updated : 25 May 2020 06:38 AM

‘பிஎம்-கேர்ஸ்’ நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கிறார் முப்படை தளபதி

பிபின் ராவத்

புதுடெல்லி

முப்படை தளபதி பிபின் ராவத், பிஎம்-கேர்ஸ் நிதிக்கு தனது சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிராக போரிடுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் ‘பிஎம்-கேர்ஸ்’ நிதி உருவாக்கப்பட் டுள்ளது. இந்த நிதிக்கு முப் படை தளபதி ரூ.6 லட்சம் நிதி வழங்குகிறார்.

இதுபற்றி ராணுவ வட்டாரங் கள் கூறும்போது, ‘‘முப்படை தளபதி பிபின் ராவத் தனது சம்பளத்தில் இருந்து மாதந் தோறும் ரூ.50 ஆயிரம் வீதம் அடுத்த 12 மாதங்களுக்கு பிடித்தம் செய்து, அதை பிஎம்-கேர்ஸ் நிதியில் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த மார்ச்சில் கடிதம் எழுதினார். அதன்படி, கடந்த ஏப்ரல் மாத சம்பளத்தில் ரூ.50 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு பிஎம்-கேர்ஸ் நிதியில் செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரி வித்தன.

பிஎம்-கேர்ஸ் நிதி உருவாக் கப்பட்டவுடன் ராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் மார்ச் மாதம் தங்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்கினர். அப் போது பிபின் ராவத்தும் தனது ஒருநாள் சம்பளத்தை வழங்கி னார். இந்நிலையில், ஓராண் டுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்கும் அவரது முடிவு, மற்ற உயரதிகாரிகளையும் இதுபோல் வழங்க ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறை ஊழியர்கள் அனைவரும் ஓராண்டுக்கு மாதந்தோறும் ஒருநாள் ஊதி யத்தை பிஎம்-கேர்ஸ் நிதிக்கு வழங்கலாம் என்றும், எனினும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மட்டும் நிதி பெறப் படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப் னரும் கடலோர காவல் படை யின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர சிங்கும் தனது 30 சதவீத சம்பளத்தை பிஎம்- கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள் ளார். இதுபோல் ராணுவ தலைமையகத்தில் உள்ள உயரதிகாரிகள் பலர் நன் கொடை வழங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x