Published : 23 May 2020 07:20 PM
Last Updated : 23 May 2020 07:20 PM

நீண்டநேரம் பயன்படுத்தலாம்; வேலை செய்ய எளிமையான முக கவகசங்கள்: அறிவியல் தொழில்நுட்பத் துறை வடிவமைப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நீண்டநேரம் பயன்படுத்துவிதமாகவும், வேலை செய்யும்போது எளிதாக இருக்கும் வகையிலும் சௌகரியமான கோவிட்-19 பாதுகாப்பு முகக்கவசங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான பெங்களூருவில் உள்ள CeNS மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கப் வடிவிலான முகக்கவச உறையை வடிவமைத்துள்ளது. இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முகத்துக்கு முன்னால் போதிய இடைவெளி இதில் இருப்பதால் பேசுவதற்கு வசதியாக உள்ளது. அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக இந்த வடிவமைப்பு பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு அளிக்கப் பட்டுள்ளது.

முகத்துடன் ஒட்டியிருக்கும் இந்த முகக்கவச உறை பேசுவதற்கு இடையூறாக இருக்காது, முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடியில் படலத்தை ஏற்படுத்தாது, உண்மையில் முகத்தை சுற்றி நன்கு பொருந்திக் கொள்ளும், மூச்சு விடும்போது இடைவெளி எதுவும் ஏற்படாது.

பெங்களூருவைச் சேர்ந்த கெமெல்லியா குளோத்திங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு இந்தத் தொழில்நுட்பத்தை CeNS அளித்துள்ளது. இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தினமும் ஒரு லட்சம் முகக்கவச உறைகளைத் தயாரித்து, நாடு முழுக்க உள்ள பல்வேறு விநியோத் தொடர்புகள் மூலம் விற்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x