Published : 23 May 2020 04:47 PM
Last Updated : 23 May 2020 04:47 PM
கரோனா வைரஸ் லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த மணிப்பூர் மக்கள் சொந்த மாநிலம் திரும்பும்போது கண்டிப்பாக 14 நாட்கள் தனிமை முகாமுக்குச் செல்ல வேண்டும். அதை ஏற்க மறுத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என முதல்வர் பிரேன் சிங் எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வர்த்தகத்துக்காகவும் சென்ற மணிப்பூர் மக்கள் அங்கியே சிக்கிவிட்டனர். இவர்கள் சொந்த மாநிலம் திரும்புவதில் பெரும் சிரமம் இருந்தது.
மத்திய அரசு ஷ்ராமிக் ரயில்களை இயக்கியபின் அதில் பயணித்து மணி்்ப்பூர் மக்கள் சொந்த மாநிலம் சென்று வருகின்றனர். மேலும் மாநிலத்துக்குள் வர விரும்பும் மக்களுக்காக மணிப்பூர் அரசு தனியாக இணைதளம் உருவாக்கி அதில் பதிவு செய்ய உத்தரவி்ட்டது. ஏப்ரல் 19-ம் தேதிவரை கரோனா இல்லாத மாநிலமாக இருந்த மணி்ப்பூரில் அடுத்த 2 பேர்பாதிக்கப்பட்டனர். அவர்களும் குணமடைந்தனர்
அதைத்தொடர்ந்து அசாமில் சிக்கியிருந்த 87 மணிப்பூர் மக்கள் நாகாலாந்துவழியாக மணிப்பூருக்கு கடந்த 2-ம் ேததி அழைத்து வரப்பட்டனர். அதன்பின், 1,140 பயணிகள் ஷ்ராமிக் ரயிலில் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
மூன்றுவாரங்களாக கரோனா இல்லாத மாநிலமாக இருந்த நிலையில், இப்போது அசாம், சென்னையிலிருந்து மணிப்பூர் மக்கள் வந்தபபின் 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்னும் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், ஹைதராபாத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து ஷ்ராமிக் ரயில்கள் மூலம் மணி்ப்பூர் மக்கள் சொந்த மாநிலம் சென்று வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் அங்கு கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இன்று புதிதாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதில் “ மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்2005 நடைமுறையில் இருப்பதால், வெளிமாநிலங்களில்இருந்து மணிப்பூருக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தனிமை முகாமுக்குச் செல்ல வேண்டும்
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். தனிமை முகாமுக்கு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து வருவோருக்கு பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமை முகாமுக்குச் செல்லலாம்.
வீட்டில் தனிமைப்படுத்த முடியாதவர்கள் அரசின் முகாமில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். மாநிலத்தில் கரோனா பரவாமல் தடுப்பது அரசின் முதன்மையான நோக்கமாகும். மணிப்பூரில் திடீரென 25 பேருக்கு கரோனா வந்துவி்ட்டதாக மக்கள் அச்சப்பட வேண்டாம்.
இரு பரிசோதனை மையங்கள் மூலம் நாள் தோறும் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 800 மாதிரிகள் வரை எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT