Published : 23 May 2020 12:49 PM
Last Updated : 23 May 2020 12:49 PM
உம்பன் புயலால் மேற்குவங்க மாநிலம் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் வரும் 26-ம் தேதிவரை புலம்பெயர் தொொழிலாளர்களை அழைத்துவரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்
வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹவுரா போன்றவை புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இதுவரை புயலுக்கு 86 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.1000 கோடி உடனடி நிவாரணம் அறிவித்தார். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகளை மாநிலஅரசு முழுவீச்சில் செய்து வருகிறது
இந்நிலையில் மீட்புப்பணிகளை தீவிரமாகச் செய்துவரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவரும் ஷ்ராமிக் ரயில்கள் வந்தால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என மேற்கு வங்க அரசு கருதுகிறது. ஆதலால் வரும் 26-ம் ேததி வரை ஷ்ராமிக் சிறப்பு இயக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
இது தொர்பாக மேற்குவங்க மாநிலத்தின் தலைமைச்செயலாளர் ராஜிவா சின்ஹா நேற்று ரயில்ேவ வாரியத்தின்தலைவர் வி.கே.யாதவுக்கு எழுதிய கடிதத்தில் “ உம்பன் புயலால் மேற்குவங்க மாநிலம் மோசமாக பாதி்்க்கப்பட்டுள்ளது.
அதற்கான மறுகட்டமைப்பு பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகமும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இயங்குவருவதால், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் இருந்து வரும் பயணிகளை பரிசோதித்து அனுப்புவது இயலாத பணி.ஆதலால், வரும் 26-ம் தேதிவரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை அனுமதிப்பதில் தொடக்கத்திலிருந்தே மத்திய அரசுக்கும், மேற்குவங்க அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ஷ்ராமிக் ரயில்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு மறுக்கிறீர்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மற்ற மாநிலங்கள் ஷ்ராமிக் ரயில்களை அனுமதி்த்த அளவோடு ஒப்பிடுகையில் மேற்கு வங்கம் குறைவாகவே அனுமதித்திருந்தது. இந்த சூழலில் உம்பன் புயலால் ஷ்ராமிக் ரயில்கள் வருகையை தற்காலிகமாக மேற்கு வங்க அரசு நிறுத்தியுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT