Published : 23 May 2020 11:36 AM
Last Updated : 23 May 2020 11:36 AM
டெல்லியிலிருந்து இயக்கப்படும் 15 ஜோடி ராஜ்தானி சிறப்பு ரயில்களில் பயணிக்க 30 நாட்களகுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம், டிக்கெட்டுகளை முன்பவு மையங்களிலும் பெறலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
இதற்கு முன் முன்பதிவு என்பது வெறும் 7 நாட்கள் வரை மட்டும்தான் இருந்தது, மேலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது
ரயி்ல்வே அமைச்சகத்தின் ஊடகப்பிரிவு இயக்குநர் ராஜேஷ் தத் பாஜ்பாய் நேற்று கூறுகையில் “ டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ராஜ்தானி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தியுள்ளோம்.
இதில் ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு பட்டியல் வெளியிடப்படும். ஆனால், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் டிக்கெட் உறுதியில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். தட்கல் வகை முன்பதிவும் அனுமதிக்கப்படவில்லை.
ரயில்புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்புதான் முதல்முன்பதிவு தொடங்கும், 2-வது அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பு தொடங்கும். டிக்கெட்டுகளை பிஆர்எஸ் கவுன்ட்டர்கள், அஞ்சலகங்கள், யாத்ரி டிக்கெட் சுவிதா கேந்திரா, ஆன்லைன் முன்பதிவு, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் ஆகியோரிடம் டிக்கெட் முன்பதிவு பெறலாம்” எனத் தெரிவித்தார்
ஏற்கெனவே டெல்லியிலிருந்து 15 சிறப்பு ராஜ்தானி ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்த சூழலில் ஜுன் 1-ம் தேதி முதல் 100 ஜோடி ரயில்களை பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்க இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT