Published : 22 May 2020 04:15 PM
Last Updated : 22 May 2020 04:15 PM
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஒரு கேண்டீன் தொழிலாளி கரோனா வைரஸுக்கு பலியானார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்த விடுதி நிர்வாகமே இதற்கு பொறுப்பு என எய்ம்ஸ் மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவர்கள் சங்கம் (ஆர்.டி.ஏ.) குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘"ஆர்.பி.சி கேண்டீனில் தொழிலாளி ஒருவர் கோவிட் -19 காரணமாக இறந்தார்.
இன்று உயிரிழந்துள்ள கேன்டீன் தொழிலாளியின் மரணத்திற்கு இருதயப் பிரச்சினைதான் காரணம் என்று விடுதி கண்காணிப்பாளர் கூறினார். இந்த சம்பவத்திற்கு விடுதி கண்காணிப்பாளர் மற்றும் மூத்த வார்டன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை சார்ந்த அனைத்து கேன்டீன் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சோதனை செய்ய வேண்டும். தொற்றுநோய்களின் போது எங்களுக்கு சேவை செய்து வந்த கேன்டீன் தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.''
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை குடியிருப்பு மருத்துவர்கள் சிலர் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கூறுகையில், "எய்ம்ஸ் அதன் குடியிருப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, வழக்கமான ஸ்கிரீனிங் மற்றும் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. " என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT