Published : 22 May 2020 07:45 AM
Last Updated : 22 May 2020 07:45 AM
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ.21 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு பொருளாதாரத் திட்டங்களை கடந்த வாரம் நி்ர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில் அது தொடர்பாக கடன் வழங்குதல், பொருளாதார மறுமலர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது
இதேபோன்ற கூட்டம் கடந்த 11-ம்தேதி நடத்தப்படுவதாக முன் அறிவிக்கப்பட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பொருளாதார மீட்புத்தி்ட்டம் அறிவிக்கப்பட்ட பின் இந்த கூட்டம் நடப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை கூடியபோது, தற்சார்பு பொருளாதாரத்துக்கான பல்ேவறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஆதலால், நிர்மலா சீதாராமன், இன்று வங்கித் தலைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
வங்கித் தலைவர்களுடன் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலமே நடக்கிறது. இந்த கூட்டத்தில் ரிசர்்வ் வங்கி குறைத்த வட்டி வீதம் மக்களுக்கு முழுமையாக வங்கிகள் வழங்கின்றதா, கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டதை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், சிறுகுறு நிறுவனங்களுக்கு பிணை இல்லாமல் ரூ.3 லட்சம் கோடிக்கு 9.25சதவீத வட்டியில் கடன் வழங்க மத்திய அரசு அறிவித்தது, அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT