Last Updated : 22 May, 2020 06:49 AM

1  

Published : 22 May 2020 06:49 AM
Last Updated : 22 May 2020 06:49 AM

லாக்டவுன்: வந்து சேராத அரசு உதவிகள் முதல் பல கடும் இன்னல்களை அனுபவிக்கும் மாற்றுத் திறனாளிகள்

மே 17, 2020- அன்று டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குச் சைக்கிளில் செல்லும் புலம்பெயர் தொழிலாளியின் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை.

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா லாக்டவுன்4.0வில் உள்ளது. மார்ச் 25ம் தேதி முதல் லாக் டவுன் இருந்து வருவதில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிப்பை நாம் பார்த்து வருகிறோம். மாற்றுத் திறனாளிகள் சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் இவர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல், அரசு உதவிகள் வந்து சேர்வதில் சிக்கல், அரசு உதவி எண்கள் மூலம் உதவிபெறுவதில் சிக்கல்கள் உள்ளிட்டவை பல பிரச்சினைகளில் முக்கியமான சில பிரச்சினைகளாகும் என்று “கோவிட்-19 லாக் டவுன் காலக்கட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை” என்ற அறிக்கையில் அந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

இந்த அறிக்கையில் 1067 பேர் தங்கள் நிலையை விவரித்துள்ளனர், மாற்றுத்திறனாளி துறை தலைவர்கள் 19 பேர் ஆகியோர் அரசு உதவிகள் இவர்களுக்கு உறுதி செய்யப்படுவதையும் அரசு வழிகாட்டு நெறிகளை செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடி வருவதில்லை. 12% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன. 48% மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவி எண்களை அணுக முடியவில்லை. நிதியமைச்சகம் அறிவித்த நிதியுதவி 67% மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கவில்லை என்று இந்த சர்வேயில் நேர்காணல் செய்யப்பட்ட நபர்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மாற்றுத்திறனாளி அதிகாரம் வழங்குதல் துறை வெளியிட்ட ’ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல்கள்’ என்ற அறிவுறுத்தலை நாடு முழுதும் சீராக செயல்படுத்தினாலே இந்தச் சிக்கல்களை தவிரித்திருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.

இந்த அறிக்கையில் கேரளா, தமிழகம், நாகாலாந்து, அஸாம் உட்பட சில மாநிலங்களில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி மட்டுமல்லாது, வரவிருக்கும் எந்த ஒரு நெருக்கடியுமே மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிய இன்னல்களைக் கொடுக்கும் என்பதால் அரசு இவர்களையும் உள்ளடக்கிய விதத்தில் செயல் திட்டங்களை வகுத்தெடுத்து அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x