Published : 21 May 2020 01:23 PM
Last Updated : 21 May 2020 01:23 PM
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் கவுன்சிலரின் கணவரும் பாஜக தலைவருமான அனுராக் ஷர்மா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதன் இரவு அனுராக் ஷர்மா தன் ஸ்கூட்டியில் ஜ்வாலா நகரில் உள்ள தன் இல்லத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது பைக்கில் வந்த சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.
உடனடியாக இவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே பரிபாதமாக இவர் உயிர் பிரிந்தது.
அனுராக் ஷர்மா குற்றப்பின்னணி உடையவர், இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் இவரைச் சேர்ந்த ரவுடிகள் மாவட்ட மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது மனைவி ஷாலினி ஷர்மா ராம்பூர் பாஜக கவுன்சிலர் ஆவார்.
காவல் தலைமை ஆய்வாளர் ரமித் ஷர்மா விசாரணையை தலைமையேற்று நடத்தி வருகிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை நியமித்துள்ளார்.
அனுராக் ஷர்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டு வருவதாக ரமித் ஷர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT