Published : 20 May 2020 01:36 PM
Last Updated : 20 May 2020 01:36 PM

‘‘பேருந்துக்கு அனுமதி மறுப்பு; மோசமான அரசியல் செய்யாதீர்கள்’’- உ.பி. அரசு மீது சச்சின் பைலட் சாடல்

ஜெய்ப்பூர்

உத்தர பிரதேச அரசு காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பது மோசமான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 1000 பேருந்துகளை இயக்க காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி முடிவெடுக்க அதன்படி 1000 பேருந்துகளின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உத்தரப்பிரதேச அரசு கேட்டிருந்தது. ஆனால் இந்த எண்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோரிக்சா எண்கள் இருந்ததாக உ.பி. அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஆயிரம் பேருந்துகளையும் சரிப்பார்க்க வேண்டும் என்று உ.பி. அரசு கோரியதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. மாநில எல்லையில் பேருந்துகளை உ.பி. போலீஸார் மடக்கி நிறுத்தி வைத்ததாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இதற்கு பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் கூறியதாவது:

பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி உணவும், வாகன வசதியும் ஏற்பாடு செய்து தருகிறது. எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதனை வரவேற்க வேண்டும். ஆனால் உத்தர பிரதேச அரசு அனுமதி மறுக்கிறது. பேருந்துகள் செல்ல அனுமதிக்கவில்லை எங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்கிறது. மோசமான அரசியல் செய்கிறது. இதனை எப்படி நியாயப்படுத்த முடியும். ’’ எனக் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x