கரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும் திருப்பதி கோயிலுக்கு ரூ.90 லட்சம் காணிக்கை

கரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும் திருப்பதி கோயிலுக்கு ரூ.90 லட்சம் காணிக்கை
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று பிரச்சினைக்கு மத்தியிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு ஆன்லைன் மூலம் பக்தர்கள் ஒரே மாதத்தில் ரூ.90 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதிஏழுமலையான் கோயிலில் கடந்தமார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்பட்டது. ஆயினும் ஏழுமலையான் கோயிலில் வழக்கம்போல் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 55 நாட்களில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.700 கோடி வரை வருவாய் குறைந்தது தெரியவந்துள்ளது. உண்டியல் வருமானம் தினமும் ரூ.3 கோடி வரை பக்தர்களால் செலுத்தப்பட்டு வந்தது. மேலும், தங்கும் விடுதிகளின் வருவாயும் தடைபட்டது. இதேபோன்று பிரசாதம் விற்பனை, கடை வாடகைகள் போன்றவையும் முற்றிலும்நின்றுபோனது. இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், ஆன்லைன் மூலம் இ-உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது மட்டும் குறையவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் மூலம்உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ரூ.90 லட்சம் காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ரூ.90 லட்சம்ஆன்லைன் மூலம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in